மை பன்ச்சிங் பேக்.. சோமசேகரை கட்டிப்பிடித்து வாழ்த்திய அர்ச்சனா.. டிரெண்டாகும் #HBDSom
சென்னை: பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் அதிகமாக யாரிடமும் பிரச்சனை வைத்துக் கொள்ளாமல் அனைவரது மனங்களையும் கவர்ந்த சோமசேகருக்கு இன்று பிறந்தநாள்.
சோமசேகரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்பு அன்னை அர்ச்சனா சோமசேகரை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு "மை பன்ச்சிங் பேக்" என கொடுத்திருக்கும் கேப்ஷன் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் ரசிகர்களும் சோமசேகரை வாழ்த்தி ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நல்ல உள்ளம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்ட போட்டியாளர்களின் அதிகமாக யாரையும் காயப்படுத்தாமல், யாரிடமும் சண்டை போடாமல் சமத்துப் பிள்ளையாக இருந்தது சோமசேகர் மட்டும் தான். கிராண்ட் ஃபினாலே வாரத்திற்குள் நுழையும் போட்டியிலும் அதிக புள்ளிகளை பெற்று டிக்கெட் டு கிராண்ட் ஃபினாலேவை பெற்றதும் சோம் தான்.

சோமுக்கு பர்த்டே
பிக் பாஸ் போட்டியாளர் சோமசேகருக்கு இன்று பிறந்தநாள். சோமசேகரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் #HBDSom என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். ஏகப்பட்ட பிறந்தநாள் காமன் டிபி புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியின் பிக் பாஸில் கலந்து கொண்ட சோமுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
வாழ்த்திய மோனல்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை மோனல் கஜ்ஜார், சோமசேகரின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோவை சோமின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

சம்யுக்தா வாழ்த்து
வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுக்கு ஆரம்பத்தில் இருவரும் ஜோடி போட்டு ஆடினர். சோம் - சாம் நட்பு பிக் பாஸ் வீட்டுக்கு வெளியேவும் அழகாக தொடர்கிறது. சமீபத்தில் நடைபெற்ற அர்ச்சனாவின் தங்கை வளைகாப்பு நிகழ்ச்சியிலும் இருவரும் பங்கேற்று எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

வெற்றிகள் உன்னைத் தேடி வரும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சோமசேகர், வெற்றிகள் உன்னைத் தேடி வரும்.. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வாழ்த்துக்கள் என பிக் பாஸ் போட்டியாளர் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பன்ச்சிங் பேக்
அன்பு கேங்கின் அன்னையான அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோமசேகருடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை போட்டு, என் அன்பு தம்பி, என் உயிர் நண்பன், என் பன்ச்சிங் பேக், என் வாழ்நாள் முழுவதும் நம் நட்பு தொடரும் எப்போதுமே ஹேப்பியா இருப்ப சோம் என வாழ்த்தியுள்ளார்.

ரம்யா பாண்டியன் வாழ்த்தினாரா
மேலும், பல பிக் பாஸ் பிரபலங்களும், பிக் பாஸ் ரசிகர்களும் சோமசேகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டார்லிங் ரம்யா பாண்டியன் வாழ்த்து சொன்னாரா? எல்லோரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடுறீங்களா என ஏகப்பட்ட கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தங்க மனசுடா உனக்கு
ஹேப்பி பர்த்டே டார்லிங் சோமசேகர் மச்சா.. தங்க மனசுடா உனக்கு! எல்லாமே உனக்கு வெற்றியாகட்டும்.. சோமே.. மாமே.. என பாலாஜி முருகதாஸும் சோமசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தங்கமகன் சோமசேகர் எனும் பிறந்தநாள் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











