மோசமான பிஹேவிங்.. வனிதாவ பாக்குற மாதிரியே இருக்கு.. பாலாஜியை கதறவிட்ட அர்ச்சனா.. ஆட்டம் ஆரம்பம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் நாள் தோறும் ஏதாவது ஒரு சண்டைக் காட்சி இருந்த வண்ணம் உள்ளது.
சண்டை சச்சரவு, கண்ணீர், கதறல் என கடக்கிறது பிக்பாஸின ஒவ்வொரு எபிசோடும்.

முதல் புரமோ
இந்நிலையில் இன்றும் ஒரு கதறல் சம்பவம் அரங்கேறியிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ மூலம் தெரிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ நேற்றைய சம்பவத்தின் தொடர்ச்சியாக உள்ளது.

பயங்கரமான பாடி லாங்குவேஜ்
அதன்படி அர்ச்சனாவும் ரியோவும் சேர்ந்து, பாலாஜி முருகதாஸை போட்டு காய்ச்சி எடுத்துள்ளனர். அர்ச்சனா, பயங்கரமான உடல் மொழியை காட்டி பாலாஜியை வெறுப்பேற்றுகிறார்.

கும்பிடு போட்டு
கைகளை தட்டியும், கும்பிடு போட்டும் பார்க்கவே அருவருக்க தக்க வகையில் பாலாஜியை கார்னர் செய்கிறார் அர்ச்சனா. அதற்கு கேப்டன் செய்தது எனக்கு பிடிக்கவில்லை ஆகையால் கேப்டனை பிடிக்கவில்லை என்கிறார் பாலாஜி.

கேட்டுதான் ஆகவேண்டும்
ரியோவும் தன் பங்குக்கு பாலாஜியை டார்கெட் செய்கின்றார். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, அப்படியெல்லாம் இருக்க முடியாது, உனக்கு பிடிக்குதோ இல்லையோ அடுத்த 4 நாளைக்கு கேப்டன் சொல்வதை நீ கேட்டுதான் ஆக வேண்டும் என்கிறார் அர்ச்சனா.

கண்ணீர் விட்ட பாலாஜி
அதற்கு முடியாது என மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லும் பாலாஜி, கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் டேபிள் சேரில் தனியாக அமர்ந்து கண்ணீர் விடுகிறார். கண்களில் வழியும் கண்ணீரை தான் அணிந்திருக்கும டி ஷர்ட்டை எடுத்து துடைத்து கொள்கிறார் பாலாஜி.

கண்ணீர் விட்ட பாலாஜி
அதற்கு முடியாது என மூஞ்சில் அடித்தாற் போல் சொல்லும் பாலாஜி, கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் டேபிள் சேரில் தனியாக அமர்ந்து கண்ணீர் விடுகிறார். கண்களில் வழியும் கண்ணீரை தான் அணிந்திருக்கும டி ஷர்ட்டை எடுத்து துடைத்து கொள்கிறார் பாலாஜி.

வனிதா போன்று..
இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், பாலாஜியின் ஆட்டியூடை அர்ச்சனாவால் தாங்க முடியவில்லை, அதனால்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கார்னர் செய்கின்றார் என்றும் அர்ச்சனாவின் பிஹேவிங் வனிதாவை போன்றே உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











