அழுத்தக்கார பாப்பா சனம்.. ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா.. டாஸ்க்கில் சொந்த வெறுப்பை காட்டுறீங்களே?
சென்னை: விஜய் டிவியில் வெளியான மூன்று புரமோக்களிலும் ரியோ ராஜே அதிகளவில் ஆக்கிரமித்த நிலையில், விஜய் மியூசிக்கில் இப்போ வெளியாகி உள்ள புரமோவில், சனம் ஷெட்டியை அழ வைக்க அரக்கர்கள் கூட்டம் அட்டகாசம் செய்கிறது.
அதுவும் கொஞ்ச நஞ்ச அட்டகாசம் இல்ல பாஸ், ஒட்டுமொத்த வெறுப்பையும் கொட்டித் தீர்க்கும் அட்டகாசம்.
இதைப் பார்த்தா டாஸ்க்காவே தெரியலையே டைரக்ட் அட்டாக்காக இருக்கே என ரசிகர்களும் டென்ஷன் ஆகி உள்ளனர்.

மாட்டிக்கிட்ட சனம்
பாத்ரூம் கழுவ முடியும், குனிஞ்சு துணி துவைக்க முடியாதா என தாத்தா சுரேஷை நேத்து வச்சு செஞ்ச சனம் ஷெட்டியை, மொட்டை பாஸ் உள்பட ஒட்டுமொத்த அரக்கர்கள் கூட்டமும் ஒன்று சேர்ந்து வச்சி செய்றதை பார்க்க முடியாம, கண்களை மூடிக் கொண்டு, மெளனியாக இருக்கிறார் சனம் ஷெட்டி.

ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா
நாம ஒண்ணு பேச போன சின்க்கே இல்லாமல், வேறு ஒன்றை பேசுகிறார் என அர்ச்சனா அக்காவும், அனிதா சம்பத்தும் சனம் ஷெட்டியை இது தான் சாக்கு என்று நல்லா வச்சு செய்றாங்க.. இந்த மாதிரி சபையில தான் சனம் பத்தி பேசணும்னு அனிதாவும் இஷ்டத்துக்கு எக்கச்சக்க பிட்டை போட்டு தான் ஒரு ரியல் டெவில் என்பதை காட்டுகிறார்.

அழுத்தக்கார பாப்பா சனம்
அர்ச்சனா, அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ் எல்லாம் கலாய்ப்பதை பார்த்து கொஞ்சம் கூட ஆடாமல் அசையாமல் எப்படியாவது இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என இருக்கும் சனம் ஷெட்டியை பார்த்து, கடைசியாக அந்த பாப்பாவுக்கு அழுத்தம் அதிகம் என சுரேஷ் சொல்லி செம சிக்ஸர் அடித்து ஸ்கோர் செய்துள்ளார்.

ஒரு நாள் அழும் பாருங்க
ஆமா, உள் அழுத்தம் தான் என ஆரம்பிக்கும் அர்ச்சனா, ஒரு நாள் உடையும் பாருங்க உடைஞ்சு அழும் பாருங்க, அன்னைக்கு அதுவே தாங்காது என டாஸ்க்காக விளையாடாமல் சொந்த பிரச்சனைகளுக்கு பழி வாங்குவது போல அர்ச்சனா மற்றும் மற்ற அரக்கர்கள் பேசுவதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப டூ மச் என திட்டி வருகின்றனர்.
Recommended Video

முதல் சீசன்லயே
இன்னைக்கு சுரேஷ் டீம் வந்து அரக்கர்கள், அடுத்து இரண்டு நாட்கள் கழித்து ரியோ டீம் அரக்கர்கள், அன்னைக்கு இதுக்கெல்லாம் பதிலடி கொடுத்து அவங்க வச்சி செய்வாங்க, அது தானே டாஸ்க். இதெல்லாம் முதல் சீசன்லயே பார்த்துட்டோம் பிக் பாஸ், புதுசா ஏதாவது கேம் வைங்க என தீவிர பிக் பாஸ் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











