லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அர்ச்சனா டீம் வின்னு.. இந்த வார கேப்டன் அவரோ.. ஆட்டம் ஜாஸ்தியா இருக்குமே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் அவரது அணியினர் வெற்றி பெற்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாய் நடைபெற்று வந்து லக்ஸரி பட்ஜெட்டுக்கான மணிக்கூண்டு டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்தது.
தொடர்ந்து 45 மணி நேரம் நடைபெற்ற இந்த டாஸ்க்கில் மூன்று போட்டியாளர்கள் வீதம் 5 குழுக்களாக பங்கேற்றனர்.

அர்ச்சனா டீம் வெற்றி
வெயில் மழை, இரவு பகல் என தொடர்ந்த இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும். மூன்று சுற்றுகலாக நடைபெற்ற இந்த போட்டியில் அர்ச்சனா, சோம சேகர் மற்றும் சம்யுக்தா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது டீம்
இவர்கள் மூன்று மணி நேரத்தை 18 நிமிடங்கள் வித்தியாசத்துடன் கணித்தனர். அவர்களை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ், ஆஜித், ஷிவானி ஆகியோரின் டீம் 56 நிமிடங்கள் வித்தியாசத்தில் கணித்து இரண்டாவது இடத்தை பெற்றனர்.

ஒரு மணிநேரம் 1 நிமிடம்
அடுத்தப்படியாக ஆரி, ரியோ, கேபி ஆகியோரின் டீம் ஒரு மணி நேரம் ஒரு நிமிட வித்தியாசத்த்தில் மூன்று மணி நேரத்தை மூன்று சுற்றுகளில் கணித்தது. இந்த டீம் மூன்றாவது இடத்தை பிடித்தது.

பாலாஜி டீம் கடைசி
முதல் இடத்தை பிடித்த அர்ச்சனா டீமுக்கு 1000 பாயிட்ஸும், ஜித்தன் ரமேஷ் டீமுக்கு 800 பாயிட்ஸும் ஆரியின் டீமுக்கு 600 பாயிட்ஸும் வழங்கப்பட்டது. இதில் மிகக் குறைந்த அளவாக டாஸ்க்கில் செம சொதப்பு சொதப்பி கடைசி இடத்தை பிடித்த பாலாஜி டீமுக்கு 200 பாயிண்ட்ஸ் வழங்கப்பட்டது.

கேப்டன் டாஸ்க்
இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடத்தை பிடித்த அர்ச்சனா டீமை சேர்ந்த மூன்று பேரும், ஒவ்வொரு சுற்றிலும் மிக குறைந்த வித்தியாசத்தில் கணித்த ஆரி டீமை சேர்ந்த 3 பேரும் என மொத்தம் 6 பேர் இந்த வார கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











