twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுவாரசியம் குறைவு.. ஆரியையும் அனிதாவையும் ஜெயிலுக்கு அனுப்ப ஸ்கெட்ச் போடும் ஹவுஸ்மேட்ஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் வீட்டில் பாட்டி சொல்லை தட்டாதே, க்ளாக் டாஸ்க், கால் டாஸ்க் வகையில் இந்த வாரம் ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    நடிகர் திலகம் சிவாஜியின் அரசியலை ஒப்பிட்டு அவதூறாக விமர்சிப்பதா? நடிகர் நாசர் ஆவேசம் நடிகர் திலகம் சிவாஜியின் அரசியலை ஒப்பிட்டு அவதூறாக விமர்சிப்பதா? நடிகர் நாசர் ஆவேசம்

    இதில் மனிதர்கள் ரோபோக்களின் உணர்ச்சிளை வெளியே கொண்டு வர வேண்டும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோக்கள் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டன.

    வீழ்த்திய அர்ச்சனா டீம்

    வீழ்த்திய அர்ச்சனா டீம்

    இதில் முதல் பகுதியில் மனிதர்களாக இருந்து பாலாஜி அணியினர், ரோபோக்களாக இருந்த அர்ச்சனா அணியை சேர்ந்த மூன்று பேரை செயலிழக்க செய்தனர். இரண்டாவது பகுதியில் ரோபோக்களாக இருந்த பாலாஜி டீமை, மனிதர்களாக இருந்து அர்ச்சனா டீம் எளிதில் வீழ்த்தியது.

    ஜெயிலுக்கு அனுப்பும் புராசஸ்

    ஜெயிலுக்கு அனுப்பும் புராசஸ்

    பாலா, நிஷா, ஆஜித் என அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக செய்த நபர்களை ஜெயிலுக்கு அனுப்புவதற்கான புராசஸ் நடைபெறுகிறது.

    மெத்தடு சுவாரசியமாக இல்லை

    மெத்தடு சுவாரசியமாக இல்லை

    இதில் முதல் ஆளாக வரும் ரியோ ஆரி சுவாரசியம் குறைவாக செய்ததாக கூறுகிறேன், அவருடைய கேம் மெத்தடு சுவாரசியமாக இல்லை என்கிறார். அதுகுறித்து கேட்கும் ரியோ என்ன கேம் மெத்தடு என்று கேட்க, பிரேக் பண்ண ஒரு மெத்தடு எடுத்தீங்களே அதைத்தான் சொல்கிறேன் என்கிறார்.

    அனிதா நாமினேஷன்

    அனிதா நாமினேஷன்

    அவரை தொடர்ந்து பேசிய சோம், ரோபோவா இருக்கும் போதும் சரி மனிதரா இருக்கும் போதும் சரி ஆரி சுவாரசியமே இல்லாத மாதிரி இருந்துச்சு என்று அவர் பங்குக்கு கூறுகிறார். அவரை தொடர்ந்து வரும் ஜித்தன் ரமேஷ், அனிதாவை நாமினேட் செய்கிறார்.

    அர்ச்சனா ஸ்கெட்ச்

    அர்ச்சனா ஸ்கெட்ச்

    அடுத்து வரும் ஆஜித்தும் சுவாரசியம் கம்மியாக இருந்ததாக அனிதாவின் பெயரை கூறுகிறார். தொடர்ந்து பேசும் அர்ச்சனாவும் அனிதாவின் பெயரை சுவாரசியம் குறைந்த நபராக கூறுகிறார். மொத்தத்தில் அர்ச்சனா அன்ட் கோ அனிதா மற்றும் ஆரியை இந்த வாரம் ஜெயிலுக்கு அனுப்ப ஸ்கெட்ச் போட்டுவிட்டது தெளிவாக தெரிகிறது.

    English summary
    Biggboss today's first promo has been released. Archana and team plans to send Anita and Aari to jail this week
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X