அன்பு தோத்துடுச்சுமா.. அர்ச்சனாவின் அழுகையை தீர்த்து வைத்த மகள் சாரா.. வேற லெவல் புரமோ!

சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

அதை முன்னிட்டு தினமும் சூப்பரான புரமோக்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தற்போது அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா நடத்திய அன்பு நாடக காட்சிகளை புரமோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறது விஜய் டிவி.

விவசாயிகள் மரியாதை

விவசாயிகள் மரியாதை

பிக் பாஸ் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு ஹைலைட்டான விஷயங்களையும் புரமோக்களாக விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றதை விவசாயிகளின் வெற்றியாக கருதுவதாகக் கூறி அவருக்கு பரிவட்டம் கட்டி அழகு பார்த்த புரமோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரம்யா சோம் ரொமான்ஸ்

ரம்யா சோம் ரொமான்ஸ்

அடுத்த புரமோவாக ரம்யா பாண்டியனின் ஆர்மியனர் ரம்யாவை தலைவி என கொண்டாடியும், அவருக்கு பூங்கொத்து, சாக்கலேட் கொடுத்தும் தங்களது அன்பை பரிமாறினர். அந்த சாக்கலேட்டை வைத்து சோமசேகர் ரம்யா ரொமான்ஸை கலாய்த்துத் தள்ளினார் டிடி. இப்படி இரண்டாவது புரமோவும் அட்டகாசமாக இருந்தது.

கிங் பாலா

கிங் பாலா

மூன்றாவது புரமோ பாலாஜி முருகதாஸ் ஸ்பெஷலாக இருந்தது. ஏகப்பட்ட அவரது ரசிகைகள் சூழ்ந்துக் கொண்டு பாலாஜி முருகதாஸை கொஞ்ச, கிங்காக அவர்களுடன் ஆடி பாடி அதகளம் பண்ணிய பாலாவின் புரமோவும் வேற லெவலில் வைரலானது. வரும் ஞாயிற்றுக் கிழமை மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களின் அழகான தருணங்களை ரசிகர்கள் கண்டுகளிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

அர்ச்சனா டிராமா

அர்ச்சனா டிராமா

இந்நிலையில், தற்போது அடுத்த புரமோவாக அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து நடத்திய அன்பான டிராமா புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. கட்டிலில் படுத்திருக்கும் அர்ச்சனாவுக்கு அவரது மகள் சாரா கடிதம் எழுதுவது போல இந்த டிராமா அரங்கேறுகிறது.

இங்கேயும் அழுகை

இங்கேயும் அழுகை

பிக் பாஸ் வீட்டில் தான் ஓயாமல் அழுது கொண்டிருந்த அர்ச்சனா, பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் அழுது வடியும் டிராமாவையே போட்டுள்ளார். ஏன் மா அழற என மகள் கேட்க, அன்பு தோத்துடுச்சுமா என சொல்லும் அர்ச்சனா கதறி அழுவதும் அதற்கு சின்ன பொண்ணு சாரா சூப்பராக ஆறுதல் சொல்லும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.

சாரா அட்வைஸ்

சாரா அட்வைஸ்

அழுகின்ற அம்மா அர்ச்சனாவை சமாதானம் செய்ய வெறும் 65 நாட்கள்ல உன் அன்பை யாராலும் முடிவு பண்ணவும் முடியாது, முடிவு கட்டவும் முடியாது என அர்ச்சனாவின் அன்பு மகள் சாரா அழகாக அட்வைஸ் சொல்லும் டிராமா ரசிக்கும் படியாக இருக்கிறது. மேலும், சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்பவர்களுக்கு எதிராகவும் சாரா பேசியுள்ளார்.

எல்லாம் டிஆர்பிக்காக

எல்லாம் டிஆர்பிக்காக

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிவதை விட அதிகமாக ட்ரோல்களே குவிவது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்குள் இருக்கும் அவர்கள் செய்யும் வேலைகள், போடும் சண்டைகள், பேசும் பேச்சுக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகவும், சண்டையையும் உருவாக்குகின்றன. இதெல்லாம் ரசிகர்கள் பண்ணவில்லை என்றால், நிகழ்ச்சிக்கு டிஆர்பியே வராது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X