வெரி ஃபேர்.. வெரி வெரி ஃபேர்.. ஆரியை கட்டம் கட்டும் அந்த 3 பெண்கள்.. தரமான சம்பவம்.. அதகள புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

சென்னை: கோழிப்பண்ணை டாஸ்க்… தூள் பண்ணிய ஆரி.. குழம்பி தவித்த ரியோ… சோம்…!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று பாலா, தானே தனது முட்டையை உடைத்தார்.

நீ என் முட்டையை தொட்டுக்கோ நான் உன் முட்டையை தொடுகிறேன் கிடைக்கும் கரன்சியில் 50 50 என டீலிங் என அவுட் ஆஃப் த பாக்ஸ் விளையாடி வருகின்றனர்.

ஷிவானி கோழி

ஷிவானி கோழி

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அதே டாஸ்க் தொடருவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில் ஷிவானி கோழியாக இருப்பதும் அவரது முட்டையை பாலாஜி தொடுவதும் தெரிய வந்துள்ளது.

ஆரியிடம் வாக்குவாதம்

ஆரியிடம் வாக்குவாதம்

மேலும் முட்டையை தொட்ட விவகாரத்தில் ஆரி, அர்ச்சனா, அனிதா, ரம்யா ஆகியோரிடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுகிறது. இதில் பேசும் அனிதா, நீங்கள் அன்ஃபேராய் விளையாடுகிறீர்கள் என்று ஆரியிடம் வாக்குவாதம் செய்கிறார்.

கையைத்தட்டி வெறுப்பேற்றி

கையைத்தட்டி வெறுப்பேற்றி

தொடர்ந்து ரம்யாவும் அர்ச்சனாவும் வெரி ஃபேர் வெரி ஃபேர் என ஆரியை கையைத்தட்டி வெறுப்பேற்றுகின்றனர். அவர்கள் மூன்று பேரின் ரியாக்ஷனையும் பார்க்கும் போது ஆரி ஏதோ தவறாக விளையாடி விட்டு ஏமாற்றுவதாக உள்ளதை போல் இருக்கிறது.

நான் ஆடுவேன்

நான் ஆடுவேன்

தொடர்ந்து கேபியும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ரூல் மாத்துறீங்க என்று கூறி ரம்யாவிடம் ஆர்க்யூ செய்கிறார். பின்னர் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் ஆரி, ரம்யா மற்றும் அனிதா ஆகியோர் நிற்க முதலில் யார் போனாலும் சரி இரண்டாவதாக யார் போனாலும் சரி நான் வந்து ஆடுவேன் என்கிறார்.

குறும்படம் இருக்கும்

குறும்படம் இருக்கும்

இதனை பார்க்கும் அர்ச்சனா இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று கூறுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய முதல் புரமோ. இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் ஆரி தவறாக விளையாடியிருக்க மாட்டார் என்றும் ஆர்க்யூ செய்பவர்களுக்கு இந்த வாரம் குறும்படம் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X