என்ன ஒரு ஆக்ரோஷம்.. பாலாவையும் ரம்யாவையும் தூக்கி சாப்பிட்ட அர்ச்சனா.. அடுத்த வாரமும் எஸ்கேப்!

சென்னை: கேப்டன் பதவிக்கான போட்டியில் பாலா மற்றும் ரம்யா எனும் இரு கடுமையான போட்டியாளர்களை வீழ்த்தி அர்ச்சனா வெற்றி பெற்றுள்ளார்.

Recommended Video

சென்னை: அன்னபூரணி அர்ச்சனா ஆட்டம் ஆரம்பம்.. ஏமாந்த பாடிபில்டர் பாலா..!

அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனான அர்ச்சனாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் சொன்னதும் சந்தோஷத்தில் குதித்தார் அர்ச்சனா.

ஏற்கனவே ஒரு முறை தலைவராக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா, இரண்டாவது முறையாக பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆகி உள்ளார்.

கேப்டன் டாஸ்க்

கேப்டன் டாஸ்க்

அடுத்த வாரத்திற்கான கேப்டன் யார் என்று தேர்வு செய்யும் போட்டியில் அர்ச்சனா, பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் போட்டியிட்டனர். கம்பி வளையத்துக்குள் கை விட்டபடியே பைகளை நகர்த்தி அதிக பைகளை முதலில் பெடஸ்டல் வைக்கும் நபரே வெற்றியாளர் என கேப்டன் போட்டிக்கான விதி வகுக்கப்பட்டது.

ஆக்ரோஷ அர்ச்சனா

ஆக்ரோஷ அர்ச்சனா

செம ஸ்பீடாக கேம் விளையாடிய அர்ச்சனா, ஒவ்வொர் பையாக கம்பி வளையத்துக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து பெடஸ்டல் மீது வேக வேகமாக வைத்து வந்தார். அர்ச்சனாவின் இந்த எனர்ஜியை பார்த்து போட்டியாளர்களும் ரசிகர்களும் மிரண்டே போய்விட்டனர். கடைசி பையை எடுத்து வந்து ஜெயித்து விட்டோம் என ஆக்ரோஷமாக போட்ட அர்ச்சனாவை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் அதிர்ந்தே போய்விட்டனர்.

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

ரியோ ராஜ், ரம்யா பாண்டியனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக கேப்டன் பதவியை அர்ச்சனா தட்டி சென்றுள்ளார். ஏற்கனவே அர்ச்சனா கேப்டனாக இருந்த போது அவருக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை தான் ரசிகர்கள் மனதில் வந்து போகிறது. இந்த முறை என்ன நடக்குமோ, வெயிட் பண்ணி பார்ப்போம்.

என்னப்பா பிரச்சனை

என்னப்பா பிரச்சனை

இந்த முறையாவது பாலாஜி முருகதாஸ் கேப்டனாக வருவார் என எதிர்பார்த்த பயில்வான் ரசிகர்களுக்கு அல்வா தான். ஏகப்பட்ட தடவை போங்காட்டம் பாலா ஆடியதாக ரியோ சுட்டிக் காட்டிய நிலையில், கடுப்பான பாலா, நான் டைரக்ட்டா எடுக்கல என ஒரு கட்டத்தில் கத்தவே ஆரம்பித்து விட்டார்.

எவிக்‌ஷன் கிடையாது

எவிக்‌ஷன் கிடையாது

அடுத்த வாரம் கேப்டனாக அர்ச்சனா வெற்றி பெற்ற நிலையில், இந்த வாரமும் அடுத்த வாரமும் காப்பாற்றப்படுவார் அர்ச்சனா என்றே தெரிகிறது. பிக் பாஸ் வீட்டில் 75 நாட்களாக சும்மா மிக்சர் தின்று கொண்டு இருக்கும் சில அரை டிக்கெட்டுகளை முதலில் பிக் பாஸ் வெளியேற்றுவார் என்றே தெரிகிறது. சீக்கிரமே அந்த அரை டிக்கெட் யார் என்பது கசிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X