ச்சீ.. ச்சீ.. எங்கப்பா மரணம் உங்களுக்கு ஃபன்னா.. உடைந்து நொறுங்கி கதறியழுத அர்ச்சனா!

சென்னை: எங்கப்பா மரணம் உங்களுக்கு ஃபன்னா என ஆவேசமாக பேசி கதறி அழுதார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அர்ச்சனா தலைமையில் ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் ரோபோக்களாகவும், ஒரு பாதி ஹவுஸ்மேட்ஸ் மனிதர்களாகவும் உள்ளனர்.

இதில் மனிதர்கள் ரோபோக்களுக்கு உணர்ச்சிகளை கொண்டு வரவேண்டும் என்பதுதான் டாஸ்க். பாலாஜி தலைமையில் ஆரி, ரியோ, நிஷா உள்ளிட்ட 6 பேர் மனிதர்களாக இருந்தனர்.

நிஷா பஞ்சாயத்து

நிஷா பஞ்சாயத்து

இதில் பல முறை நிஷா அர்ச்சனாவை பிரேக் செய்தார். முட்டை பூசியப்போது அர்ச்சனா சிரித்தார் என்று பாலாஜி ஆர்க்யூ செய்தார். முகத்தில் இருந்த முட்டையை கழுவிய போது முறைத்தார் என அர்ச்சனா கூறினார். இதுதொடர்பாக நிஷா, தங்களின் தலைவரான பாலாஜியிடம் கூறினார்.

அர்ச்சனா ஆர்க்யூ

அர்ச்சனா ஆர்க்யூ

இதனால் இந்த விவகாரத்தை பிக்பாஸ் வரை கொண்டு சென்றார் பாலாஜி. அர்ச்சனா எப்போது என்ன செய்தார் என்பதை பிக்பாஸிடம் விளக்கினார் பாலாஜி. ஆனால் அவற்றையெல்லாம் மறுத்தார் அர்ச்சனா. என் அப்பா மரணம் குறித்து நிஷா திரும்ப திரும்ப பேசியும் நான் பிரேக் ஆகவில்லை. கண்ணீர் விடவில்லை என கூறினார்.

அர்ச்சனா வாக்குவாதம்

அர்ச்சனா வாக்குவாதம்

தொடர்ந்து பேசிய அர்ச்சனா ஒரே நேரத்துல எத்தனை ரோபோவை டார்கெட் பண்ணுவீங்க. வேலையே கொடுக்கல டார்கெட் பண்ணிங்க என்று மனிதர்கள் மீது குற்றம்சாட்டினார். மேலும் தன்னிடம் இருந்து பெற்ற பேட்ச்சை திருப்பி கொடுங்கள் என்றும் வாக்குவாதம் செய்தார்.

ஒத்துக்க மாட்ட பாலாஜி

ஒத்துக்க மாட்ட பாலாஜி

ஒரு டைம்ல 6 பேர டார்கெட் பண்ணீங்க என்ற அர்ச்சனா, ஃபன் டாஸ்க் நல்லா ஃபன் பண்றீங்கம்மா என்றார். மேலும் நான்ஸ்டாப்பா டார்கெட் பண்ணீங்க.. எப்படி நியாயமா விளையாடுறீங்க என கொதித்தார். பாலாஜி எடுத்து சொல்லியும் கேட்காத அர்ச்சனா நீ அக்செப்ட் பண்ண மாட்டே பாலாஜி என வெறுப்பேற்றினார்.

அடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி?

அடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி?

இதனால் கடுப்பான பாலாஜி ஒரு முறை குறும்படம் போட்டு காட்டினாங்கன்னு சொல்லாதீங்க என்றார். ஒரு நபரரை முடிவு செய்து பஸர் டூ பஸர்க்குள்ள முடிக்கணும். நீங்க 6 பேரையும் அடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி என்று கேட்க, அதைதான் தப்பென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றார் ரியோ.

கெஞ்சிய ஹவுஸ்மேட்ஸ்

கெஞ்சிய ஹவுஸ்மேட்ஸ்

ஆனால் அதனை ஏற்காத அர்ச்சனா, அதெல்லாம் பச்ச பொய் ரியோ, நீ நம்ப மாட்ட விட்ரு என கும்பிடு போட்டு தேங்க் யூ தேங்க் யூ என்று சொல்லியப்படியே பெட்ரூமுக்கு சென்றார். அக்கா கோவப்படாதீங்க என்றப்படியே பின்னால் சென்று கெஞ்சினர் ரியோவும் பாலாஜியும்.

கதறிய அர்ச்சனா

கதறிய அர்ச்சனா

ஆனால் அர்ச்சனா, அது விளையாட்டல்ல.. இங்கிருந்து போ, இங்கிருந்து போ என பயங்கரமாக கத்தினார். அவரை ஆசுவாசப்படுத்த முயற்சிக்கும் பாலாஜி, என்மேல கோவப்படாதீங்க என்றார். அதற்கு என் அப்பாவின் மரணம் விளையாட்டல்ல என கதறியழுதார் அர்ச்சனா.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
நெஞ்சில் அடித்து ச்சீ ச்சீ..

நெஞ்சில் அடித்து ச்சீ ச்சீ..

அப்போது பேசும் நிஷா, நான்தான் பேசினேன் என்றார். அதற்கு யார் பேசினால் என்ன நிஷா அவரிடம் ஆவேசமாக கத்தினார். என் அப்பா மரணம் கேம்மில்ல என்கிட்ட பேசாதீங்க.. எங்க அப்பா மரணம் தான் உங்களுக்கு ஃபன் டாஸ்க்கா என்று நெஞ்சில் அடித்தப்படியே ச்சீ ச்சீ என கதறினார். அர்ச்சனாவின் கதறாலால் ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X