அம்மாவோட திடீர் விவாகரத்து முடிவுக்கு பொண்ணு வச்ச செக்.. பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு?

சென்னை: பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனா திடீரென தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக ஷாக்கிங் தகவல் சொல்லி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

சன் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பிரபல சேனல்களில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அன்பு கேங்கையே உருவாக்கினார் என அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார்.

இந்நிலையில், தற்போது திடீரென விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த நிலையில், அவரது மகள் குறுக்கே புகுந்து பண்ண காரியம் தான் தற்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

கடற்படையில் வேலை பார்த்து வரும் வினீத் என்பவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார் அர்ச்சனா. வினீத் மற்றும் அர்ச்சனா தம்பதியினருக்கு ஸாரா எனும் மகள் உள்ளார். அம்மாவை போலவே அம்மா உடனே தொகுப்பாளினியாகவும், விளம்பரங்களிலும் படங்களீலும் நடித்ஹ்டு வருகிறார் ஸாரா.

டாக்டர் படத்தில்

டாக்டர் படத்தில்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அம்மா அர்ச்சனாவுடன் இணைந்து ஸாராவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஸாராவை வில்லன் ஆட்கள் கடத்திக் கொண்டு செல்ல அவரை கண்டுபிடிக்க சிவகார்த்திகேயன் அர்ச்சனா மற்றும் அவரது குடும்பத்துடன் போராடுவது தான் டாக்டர் படத்தின் கதையாகவே இயக்குநர் நெல்சன் இயக்கி இருப்பார்.

பிக் பாஸ் ட்ரோல்கள்

பிக் பாஸ் ட்ரோல்கள்

பிக் பாஸ் சீசன் 4ல் அர்ச்சனா, நிஷா இருவரும் கலந்து கொண்ட நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் அவர்களை பற்றி குவிந்தன. அர்ச்சனா பாஸ் லேடியாக வீட்டையே கட்டி ஆள்கிறார் என்றும் ஃபேக்காக நடிக்கிறார் என்றும் அன்பு கேங்கை உருவாக்கி மற்றவர்களின் ஆட்டத்தை ஆட விடாமல் தடுக்கிறார் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. தனது அம்மாவிற்கு குவிந்த ட்ரோல்களை கண்டித்து பேசியிருந்தார் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஸாரா.

விவாகரத்து செய்ய முடிவு

விவாகரத்து செய்ய முடிவு

தனது கணவர் கடற்படையில் பணியாற்றி வந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில், 20 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளவே இருவரும் முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை அர்ச்சனா தற்போது சொல்லி இருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

செக் வைத்த ஸாரா

செக் வைத்த ஸாரா

அம்மா மற்றும் அப்பா விவாகரத்து செய்ய முடிவு செய்ததை அறிந்த ஸாரா இருவரையும் அழைத்து உட்கார வைத்து பேசியுள்ளாராம். இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து உங்களால் வாழ முடியுமா? என மகள் ஸாரா கேட்டதுமே இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்த பழைய நினைவுகளை மீண்டும் மீட்டுக் கொண்டு கடந்த 15 நாட்களாக முன்பை போலவே வாழ்ந்து வருகிறோம் என அர்ச்சனா கூறி உள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கணவருக்கும் விசாகப்பட்டினத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்த நிலையில், விவாகரத்து முடிவை முற்றிலுமாக மாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X