எங்க குரூப்பிஸம் இருக்கு.. யார் நம்பர் கேம் விளையாடுறாங்க.. ரியோவுக்கு விபூதியடிக்கும் அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமனேஷன் நடைபெறுவது தெரிய வந்துள்ளது.

இரண்டாவது புரமோவில் அனிதாவுக்கும் ரியோவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

மூன்றாவது புரமோ

மூன்றாவது புரமோ

இதனால் இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஆரி, ரம்யா, அனிதா, பாலாஜி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசுகின்றனர்.

நாமினேஷன் டிஸ்கஸ்

நாமினேஷன் டிஸ்கஸ்

அப்போது பேசும் ஆரி, யார் மைக்கை கழட்டி வச்சுட்டு நான் பேசினேனா? இன்னொருத்தர் நாமினேஷன் பத்தி பேசியிருப்பிங்கள்ல என்று அர்ச்சனா கேங் குறித்து பேசுகிறார். அந்த நேரத்தில் அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோர் கார்டனில் உள்ள லான் மீது படுத்துக்கொண்டு நாமினேஷன் குறித்து டிஸ்கஸ் செய்கிறார்கள்.

யார் நாமினேட்டட்?

யார் நாமினேட்டட்?

அப்போது பேசும் அர்ச்சனா ரியோவிடம், ஆரி யாரை நாமினேட் பண்ணியிருக்கார் என்று கேட்கிறார். அதற்கு என்னை என்கிறார். தொடர்ந்து அனிதா யாரை நாமினேட் பண்ணியிருக்கிறார் என்று கேட்க சோம் என்கிறார்.

என்னையும் உன்னையும்

என்னையும் உன்னையும்

மேலும் ஷிவானி யாரை நாமினேட் பண்ணியிருக்கார் என கேட்க சோம் என்று கூறிவிட்டு மற்றொருவர் குறித்து யோசிக்கிறார். அப்போது என்னைதான் என்கிறார் அர்ச்சனா. அடுத்து பாலா ரம்யா என்று கேட்க என்னையும் உன்னையும் என பதில் சொல்கிறார் ரியோ.

நம்பர் கேம் யார் விளையாடுறாங்க?

நம்பர் கேம் யார் விளையாடுறாங்க?

இவற்றையெல்லாம் கேட்கும் அர்ச்சனா, குருப்பீஸம் எங்கே இருக்கு? நம்பர் கேம் யார் விளையாடுறாங்க? புரியலையா நான் என்ன சொல்றேன்னு என்று ரியோவிடம் பாலாஜி டீம்மை குறி வைத்து பேசுகிறார் அர்ச்சனா.

லிஸ்ட்லேயே இல்லையே

லிஸ்ட்லேயே இல்லையே

இதனைக்கேட்ட கேட்ட ரியோ அட அவங்களுக்கு நம்மளை வெளியே அனுப்பனும்பா என்று கூறுகிறார். அதனைதொடர்ந்து கார்டன் ஏரியா சோஃபாவில் அமர்ந்து பேசும் பாலாஜி, இந்த மேட்டரு நம்ம லிஸ்ட்லேயே இல்லையே எனக்கூற அவர்கள் அனைவரும் செமயாய் சிரிக்கின்றனர்.

Recommended Video

விரைவில் தமிழ் படம் பண்ணுவேன் | DIRECTOR G. ASHOK CHAT PART-02 | FILMIBEAT TAMIL
தப்பியவர்கள் யார்?

தப்பியவர்கள் யார்?

இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ. இதனை பார்க்கும் போது அர்ச்சனா, ரியோ, சோம் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில் ஆஜித், கேபி, ஷிவானி ஆகியோர் நாமினேஷனில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X