சேலையை பிடிச்சு இழுத்த வேல்முருகன்.. நிஷாவும் உடந்தை.. பிக் பாஸிடம் போட்டுக் கொடுத்த அர்ச்சனா!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நாடா? காடா? டாஸ்க் பெரும் பிரச்சனைகளை கிளப்பி விட்டது.
அரக்கர்களாக இருக்கும் போது சரி, அரசர்களாக இருக்கும் போதும் சரி, மொட்டை தல சுரேஷ் சக்கரவர்த்தி சும்மாவே இல்லை. அந்த அளவுக்கு ஓவர் அராஜகம் பண்ணினார். கடைசியில அவரே அழவும் நேரிட்டது.
எல்லாத்துக்கும் மேல, அர்ச்சனாவின் சேலையை வேல்முருகன் மற்றும் நிஷா காலால் மிதித்து இழுத்து கொடுமைப் படுத்தினர்.

ஆரிக்கு பதில் அர்ச்சனா
நேற்று முதலாவதாக சனம் ஷெட்டி போனது போல இன்றும் முதலாவதாக ஒரு பெண்ணே வெளியே வந்தார். ராஜமாதவான அர்ச்சனா ஆரியை அனுப்பவுவது போல அனுப்பி விட்டு, கடைசியில் அவர் அரக்கர்கள் முன்னிலையில் வந்து நின்றார். சங்கு சத்தம் ஊதும் முன்பு தனது முடியை எல்லாம் சரி பண்ணிக் கொண்டார்.

வேற லெவல் அராஜகம்
போன எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத் எல்லாம் பேசியே வெறுப்பேற்றினார்கள். தனி நபர் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால், இந்த எபிசோடில், இவர்கள் பிளான் போட்டு தொடாமல், மற்றபடி டார்ச்சர் செய்யலாம் என வேற லெவல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

சேலையை பிடிச்சு இழுத்த வேல்முருகன்
இவரை அடுத்த சினேகன் என சொல்வதற்கு பதிலாக சினேகனுக்கு அப்பா என்றே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு அர்ச்சனா கிட்ட வந்து டார்ச்சர் பண்ணாரு. அதிலும், ஒரு பெண்ணின் சேலையை விளையாடுறேன் என்கிற பெயரில் மிதித்து இழுத்தது அர்ச்சனாவை மட்டும் அல்ல பிக் பாஸ் ரசிகர்களையும் கோபப்படுத்தியது.

அசத்திய அர்ச்சனா
இந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணியும் ஆடாமல் அசையாமல் நின்று இந்த டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்றதாக பிக் பாஸ் அறிவித்தார். அர்ச்சனாவின் கை எல்லாம் ஆடியது என ரம்யா பாண்டியன் எவ்வளவு தான் ஜூம் செய்ய சொல்லி கெஞ்சினாலும், அரக்கர் படை அர்ச்சனாவிடம் தோல்வியை தழுவியது.
Recommended Video

போட்டுக் கொடுத்த அர்ச்சனா
இவங்க ஒழுங்கான கேம் விளையாடால பிக் பாஸ்.. வேல்முருகன் மற்றும் நிஷா என் சேலையை கால்களால் மிதிச்சு, இழுத்தாங்க, இது ரொம்பவே தப்பு.. அதை பிடித்துக் கொள்ளத் தான் கையை அசைத்தேன் மற்றபடி நான் ஏமாத்தி ஜெயிக்கல என பிக் பாஸிடமே போட்டுக் கொடுத்து வின் பண்ணிட்டாங்க அர்ச்சனா.


Click it and Unblock the Notifications











