குத்தி குத்தி வெளியே அனுப்பிட்டாங்க.. நிஷா வெளியேற்றம்.. அழுது ஆர்ப்பாட்டம் பண்ண அர்ச்சனா!
சென்னை: 5 அழுகாச்சி சீரியலை ஒண்ணா பார்த்திடலாம். ஆனால், அர்ச்சனா அழுவதை பார்க்கவே முடியலை என பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.
இந்த வாரம் நிஷாவையும் ரமேஷையும் அனுப்பியதற்கு பதிலாக, அர்ச்சனாவை வெளியேற்றி இருக்கலாம் என நிஷாவின் எவிக்ஷனுக்கு பிறகு அர்ச்சனா அழுத அழுகையை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
குத்தி குத்தி நிஷாவை வெளியே அனுப்பிட்டாங்க என ஆரி மீதும், அனிதா மீதும் தனது வெறுப்பை கொட்டித் தீர்த்து விட்டார் அர்ச்சனா.

நிஷாவா? ஷிவானியா?
சனிக்கிழமை எபிசோடில் ஜித்தன் ரமேஷ் வெளியேறிய நிலையில், சன் டே எபிசோடில் நிஷா வெளியேறிவிட்டார். அதற்கு முன்னதாக, ரம்யா, கேபி, சோமசேகர் ஆகியோரை கமல் சேவ் பண்ணார். கடைசியில், நிஷவா? ஷிவானியா? என்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஷிவானி சேவ் ஆகணும்
நிஷா தான் கண்டிப்பா இந்த வாரம் வெளியே போவார் என அனிதா சம்பத், ரியோ, அர்ச்சனா என ஏகப்பட்ட பேர் முன்னதாகவே கணித்து விட்டதாக ஆளாளுக்கு ஜோசியக்காரர்களாக மாறி பேச ஆரம்பித்து விட்டனர். ரியோ கூட நிஷாவை காப்பாற்ற விரும்பாமல், ஷிவானி சேவ் ஆகணும்னு சொன்னது யூ டூ ப்ரூடஸ் என்பது போல இருந்தது.

அதிகாரப்பூர்வமாக வெளியேற்றம்
அறந்தாங்கி நிஷா தான் வெளியேறினார் என்பதை கமல் சொல்லும் முன்பாகவே, வீட்டுக்கு அவர் சென்று, கேக் கட்டிங் பண்ண வீடியோவே சமூக வலைதளத்தில் வைரலாகி விட்டது. ஆனால், சன் டே எபிசோடில் கமல் நிஷா வெளியேற்றம் என சொன்ன காட்சி வந்த பிறகு தான் அவர் அதிகாரப்பூர்வமாக வெளியேறினார் என்பது உறுதியாகும்.

அழுகை எனும் அருவியிலே
அழுகை எனும் அருவியிலே என்பது போல நிஷாவின் வெளியேற்றத்தை கேட்டதும் அர்ச்சனா அப்படியே ஷாக் ஆகி அழ ஆரம்பித்து விட்டார். அழுதார், அழுதார் ஷோ முடிந்து நிஷா வீட்டுக்கு போன வரையில் அழுது கொண்டே இருக்கிறார் அர்ச்சனா. நேற்று வெளியேறிய ஜித்தன் ரமேஷை மறந்து விட்டார். திங்கட்கிழமை நிஷாவையும் மறந்துவிட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்.

ரொம்ப ஓவர் ரியோ
பாசமலர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரிந்த அந்த தருணத்தில், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு அழுத காட்சிகளை ரசிகர்களால் கண்டு ரசிக்கவே முடியவில்லை. அத்தனை தடவை ரியோவை கட்டியணைத்து தம்பி நீ ஜெயிக்கணும்டா.. நல்லா விளையாடுடா என நிஷா ஊக்கம் கொடுத்துவிட்டு சென்றார்.

படையப்பா சிவாஜி
அர்ச்சனாவுக்கு மனசுல படையப்பா சிவாஜின்னு நினைப்பு, கடைசியா ஒருவாட்டி வாக்கிங் போகலாம் நிஷா என ஓவர் சீன் போட்டு, அவருடன் வாக்கிங் சென்ற காட்சிகள் எல்லாம் வேற லெவல் ஹைலைட். போகிற போக்கில் நிஷா, சீக்கிரமே நீயும் வந்துடு, ஜாலியா இருக்கலாம் என அர்ச்சனா எவிக்ஷனுக்கு அடித்தளம் போட்டு சென்றுவிட்டார்.

குத்தி குத்தி வெளியே அனுப்பிட்டாங்க
அறந்தாங்கி நிஷா வெளியேறியதும், குத்தி குத்தி வெளியே அனுப்பிட்டாங்க, அன்ஃபிட், அன்ஃபிட் என சொல்லியே அவுட்டாக்கிட்டாங்கன்னு ஆரி மீதும், அனிதா மீதும் அர்ச்சனா கோபத்தைக் கொட்டினார். என்னமோ பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் வாரத்திலேயே நிஷாவை வெளியே அனுப்பியது போல ரொம்பவே நடிக்கிறார் அர்ச்சனா. அதுதான் 70 நாள் ஆகிடுச்சே, ஃப்ரியா விடுங்க அர்ச்சனா என்கிற ஆறுதல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











