கடைசியா மொத்தப் பேருக்கும் சுத்திப் போட்டு கிளம்பிய அர்ச்சனா.. விர்ட்சுவல் ஹக் கொடுத்த பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப் பூர்வமாக வெளியேறினார் அர்ச்சனா.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா.
பல இழுபறிக்கு பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அர்ச்சனா, தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து பிக்பாஸை போன்று நடந்து கொண்டார்.

நினைவுப்படுத்திய கமல்
இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சனம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடிகர் கமலும் தன்னுடைய விருமாண்டி படத்தின் போது தனக்கு நேர்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து நீங்களும் போட்டியாளர்தான். ஆங்கர் இல்லை என்றார்.

தகாத வார்த்தைகள்
கடைசி வரை அன்புதான் ஜெயிக்கும் என்று தனக்கென ஒரு குரூப்பை ஃபார்ம் செய்து கொண்டு விளையாடி வந்தார். அவ்வப்போது தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார் அர்ச்சனா.

நேற்றே வெளியான தகவல்
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனாதான் வெளியேறப் போகிறார் என்று தகவல் பரவியது. இன்றைக்கான எபிசோடு நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிலிருந்து பரவிய தகவல் நேற்றே பரவியது.

மொக்கை கொடுத்த கமல்
நேற்றைய எபிசோடிலும் சரி இன்றைய எபிசோடிலும் கமல், அர்ச்சனாவை ஒரு கை பார்த்தார். இன்றைய எபிசோடிலும் முட்டை உடைந்த விவகாரத்தை கையில் எடுத்தார் கமல். இதில் தொடர்ந்து அர்ச்சனாவுக்கு மொக்கை கொடுத்தார் கமல்.

புரிந்துகொண்ட அர்ச்சனா
இதனால் எவிக்ஷனை அறிவிக்கும் முன்பே தான்தான் வெளியேறப் போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டார் அர்ச்சனா. தான்தான் வெளியேறப் போகிறேன் என்று ரியோ மற்றும் கேபியிடம் கூறினார் அர்ச்சனா.

அனைவருக்கும் ஹக்
அதனை தொடர்ந்து கமல் எவிக்ஷனை அறிவிக்க எனது மகள் சாராவை பார்க்கப் போகிறேன் என்று சந்தோஷமாக புறப்பட்டார். ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் ஹக் கொடுத்த அர்ச்சனா, உண்டியலை உடைத்து தனது காய்ன்களை மொத்தமாக கேபியிடம் கொடுத்தார்.

சுத்திப்போட்ட அர்ச்சனா
இறுதியாக ஒரு முறை ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் சுத்திப் போட்டார் அர்ச்சனா. அர்ச்சனா வெளியேறுவதை தாங்க முடியாமல் கேபி, ரியோ, சோம் ஆகியோர் கதறி அழுதனர். அவர்களை சமாதானம் செய்த அர்ச்சனா, சோமிடம் அன் கண்டிஷனலி லவ் யூ டா என்றார்.

விர்ட்சுவல் ஹக்
இறுதியாக அர்ச்சனாவிடம் பேசிய பிக்பாஸ் அவருக்கு ஆல் த பெஸ்ட் கூறினார். மேலும் அர்ச்சனாவுக்கு விர்ட்சுவல் ஹக் ஒன்றையும் கொடுத்தார பிக்பாஸ். தனது மகள் சாராவை பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் அர்ச்சனா.


Click it and Unblock the Notifications











