ஆக்டிங்னா அர்ச்சனாக்கு ஓகே.. வாயாட சொன்னா நல்லா பண்ணுவாங்க.. பிசிக்கல் டாஸ்க்னா ஜீரோ தான்!
சென்னை: லக்சரி பட்ஜெட்டை ஒரு பக்கம் குறைப்பது போல குறைத்து விட்டு, பிக் பாஸ் மறு பக்கம் ஏகப்பட்ட திண்பண்டங்களை டாஸ்க்கின் பேரில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
செஞ்சிமுடி ஒரு பிடி பிடி என்கிற டாஸ்க்கை கொடுத்து, மீண்டும் ஹவுஸ்மேட்களுக்கு தீனிப் போட்டுள்ளார் பிக் பாஸ்.
ஆனால், இந்த பிசிக்கல் டாஸ்க் எல்லாம் அர்ச்சனா அக்காவுக்கு செட் ஆகாது என்று ஏன் தான் புரிந்து கொள்ள மாட்டேங்கிறாரோ தெரியவில்லை.

ஆக்டிங்னா கிங்
பேச சொன்னா ஒரு நாள் முழுக்க கூட பேசுவார் நம்ம அர்ச்சனா அக்கா, ஆக்டிங்னா பிக் பாஸ் வீட்டிலேயே இவர் தான் கிங். ஆனால், பிசிக்கல் டாஸ்க் மட்டும் கொடுத்தால் அர்ச்சனா ஹீரோ இல்லை ஜீரோ தான். நேத்து கொடுத்த பிசிக்கல் டாஸ்க்கிலும் அவுட்டாகி மீனை கோட்டை விட்டுட்டாங்க

மினிட் டு வின் இட்
AXNல் ஒளிபரப்பாகும் 60 நொடிக்குள் செய்து முடி டாஸ்கான மினிட் டு வின் இட் நிகழ்ச்சியில் இருந்து சில பல கேம்களை காப்பியடித்து நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓட்டி விட்டனர் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

கொஞ்சம் கூட வொர்த் இல்லை
தண்ணி நிரப்பிய கப்களுக்கு மேலே டென்னிஸ் பாலை தள்ளி, கடைசியில் இருக்கும் காலி கோப்பைக்குள் போட வேண்டும். ஆனால், அர்ச்சனா அக்கா, கொஞ்சம் கூட அந்த டாஸ்க்கை வொர்த்தாக பண்ணவில்லை. அவர் ஊதுற ஊதுல அந்த பந்து, பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியே போயிடும் போல, அந்த அளவுக்கு ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகி கீழே விழுந்து அர்ச்சனாவை காண்டேத்தியது.

எதுக்கு ரிஸ்க்
நமக்கு என்ன வருமோ அதை பண்ணிட்டு போகலாம் என ரசிகர்கள் அர்ச்சனாவை பங்கமாக ஓட்டி வருகின்றனர். நிஷா மாதிரி எல்லாம் பிசிக்கல் டாஸ்க்கில் பங்கேற்க முடியாதுன்னு தான் அர்ச்சனாவை தலைவராக்க போட்டியாளர்களிடம் கை தூக்க வைத்து தலைவராக்கினார் கமல் என்றும், நமக்கு எதுக்குக்கா தேவையில்லாத ரிஸ்க் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











