இதுக்கு பேரு டாஸ்க்கா.. அவரு கால்ல விழுவாராம்.. இவரு அழுவாராம்.. வின் பண்ணியாச்சாம்.. சூப்பர் பாஸ்!

சென்னை: ரோபோ டாஸ்க்கில் தோற்கடிக்க ரியோ காலில் விழுந்தார் அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதல் பகுதியில் அர்ச்சனா தலைமையில் மொத்தமாக 6 பேர் ரோபோக்களாக இருந்தனர்.

பாலாஜி தலைமையில் மொத்தமாக 6 பேர் மனிதர்களாக இருந்தனர். இரண்டாம் பகுதியில் அப்படியே உல்டாவாக மாறியது.

எளிதில் வீழ்த்தினர்

எளிதில் வீழ்த்தினர்

இதில் அர்ச்சனா டீம் மனிதர்களாக இருந்தனர். பாலாஜி டீம் ரோபோக்களாகவும் இருந்தனர். அப்போத அர்ச்சனா டீம் எளிதாக பாலாஜி டீமை வென்றது. ஆஜித், நிஷா, அனிதா, பாலாஜி என அனைவரையும் வீழ்த்தினர்.

என்ன செய்தால் பிரேக் ஆவார்கள்?

என்ன செய்தால் பிரேக் ஆவார்கள்?

கொடுமையாக டயலாக்குகளை கொடுத்தும், முட்டை டாஸ்க்குகளை கொடுத்தும் வச்சு செய்தனர். யாருக்கு என்ன செய்தால் பிரேக் ஆவார்கள் என்று தெரிந்து அந்த வழியில் அடித்தனர்.

ரியோவை கோபப்படுத்த..

ரியோவை கோபப்படுத்த..

அனிதா, பாலாஜி, மற்றும் ஆரியை ஒரு மாதிரியாகவும் ரியோவை ஒரு மாதிரியாகவும் ட்ரீட் செய்தார் அர்ச்சனா. அந்த வகையில் மற்றவர்களை அருவருப்பாக்கிய அர்ச்சனா ரியோவை கோபப்படுத்த தன்னையே பயன்படுத்திக் கொண்டார்.

ரியோ காலில் விழுந்து..

ரியோ காலில் விழுந்து..

அதாவது ரியோவை நிற்க வைத்து அவரது காலில் விழுந்தார். அர்ச்சனா காலில் விழுந்ததை பார்த்து தாங்க முடியாத ரியோ, ரோபோ டாஸ்க்கையும் மறந்து கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார். இதனை பார்த்த கேபி ரியோ முகத்தில் கோபம் வந்துச்சு என்று கத்தினார்.

முகத்தில் காட்டவில்லை

முகத்தில் காட்டவில்லை

ஆனால் அதை ஒத்துக்கொள்ளாத ரியோ அதற்கு எனக்கு கோபம் வந்தது முகத்தில் காட்டவில்லை என்றார். அர்ச்சனா மற்றும் சோம் ஏன் கண்கள் கலங்குகிறது என்று கேட்டனர். இறுதியாக ரியோவின் இதயத்தை எடுத்த அர்ச்சனா அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு நன்றி கூறினார்.

Recommended Video

PROMO : ACTOR AMIT BHARGAV CHAT - COMING SOON | FILMIBEAT TAMIL
விளாசும் நெட்டிசன்ஸ்

விளாசும் நெட்டிசன்ஸ்

இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு பெயர் டாஸ்க்கா என்று கேட்டு வருகின்றனர். அர்ச்சனா காலில் விழுந்ததும் ரியோவுக்கு அழுகை வந்துவிடுமா என்று கேட்டு விளாசி வருகின்றனர். ரியோ அர்ச்சனா டீமுக்கே ஃபேவராக இருந்ததாகவும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X