உம்மா கொடுத்த அர்ச்சனா.. பிக் பாஸ் வீட்டின் நவரச நாயகன் இவர் தான்.. ஷிவானி தொகுத்து வழங்குனது செம!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் என முடிவு பண்ணிய ஷிவானி நாராயணன் கொஞ்சம் கொஞ்சமாக கேமராவுக்கு முன்பாக பர்ஃபார்ம் பண்ண ஆரம்பித்துள்ளார்.

அர்ச்சனா அக்காவுக்கு நைட் ரியோ ராஜ் ஐஸ் வைத்த நிலையில், அடுத்த நாள் காலையில், நவரசத்தையும் நடித்து காட்டும் டாஸ்க் நடைபெற்றது.

என்ன பிரச்சனைன்னே தெரியல, எடிட்டர், டக்குன்னு அதை தூக்கிப் போட்டுட்டார்.

வழக்கம் போல

வழக்கம் போல

படிக்காதவன் படத்தில் இருந்து "ஏய் வெற்றிவேலா" பாடல் ஒலிக்க, பிக் பாஸ் போட்டியாளர்கள் வழக்கம் போல எழுந்து வந்து நடனமாடினர். புதுசா வந்த பாடகி சுசித்ரா, ஓவியாவை போலவே தனியாக கேமராவை பார்த்து ஆடி ஸ்கோர் செய்யப் பார்க்கிறார். ஆனால், நம்ம ரசிகர்கள், ஷிவானி, கேபி, ரம்யா பாண்டியன் நடனத்தையே கண்டு ரசித்தனர்.

நவரச நடிப்பு

நவரச நடிப்பு

நவரச நடிப்பு டாஸ்க் கொடுத்துருக்காங்கன்னு ஷிவானி செல்லம் வந்து தொகுத்து வழங்கியதை பார்த்ததுமே ரசிகர்களுக்கு, ப்பா, ஷிவானி நல்லா பேச ஆரம்பிச்சிட்டாங்களே என நினைத்தனர். தொடர்ந்து, சிரிப்பது போல பண்ண ஆரம்பித்த ஷிவானி, எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டு, சரியா சிரிக்கக் கூடாத தெரியாதவர் போல பண்ணினார்.

ஆரி

ஆரி

அடுத்ததாக, ஆரி புரோ, நீங்க வந்து உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க என ஷிவானி சொல்ல, களமிறங்கிய ஆரி, சத்தமே இல்லாமல், சில நொடிகளிலேயே கிளிசரின் போடாமல் கண்களில் கண்ணீரை வரவழைத்தார். இது என்ன பிரமாதம், பிக் பாஸ் வீட்டுக்கு வரும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அடிப்படை தகுதியே அழுகை தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டின் நவரச நாயகன்

பிக் பாஸ் வீட்டின் நவரச நாயகன்

பிக் பாஸ் வீட்டின் நவரச நாயகனான சுரேஷ் தாத்தாவை கைத் தாங்கலா பிடித்துக் கொண்டு, பார்த்து வாங்க தாத்தா என ஷிவானி அன்புடன் அழைத்து வர, நவரசத்தையும் செய்து காட்டி அசத்தினார் நம்ம மொட்டை பாஸ். அர்ச்சனா அக்கா எல்லாம் இந்த டாஸ்க்கை பண்ணுவாங்களான்னு பார்த்துக் கொண்டே இருப்பதற்குள் எடிட்டர் அடுத்த காட்சிக்கு 'கட்' போட்டு நகர்ந்து விட்டார்.

உம்மா கொடுத்த அர்ச்சனா

உம்மா கொடுத்த அர்ச்சனா

சோகம், பரிதாபம், கோபம், அழுகை என ஒவ்வொரு உணர்ச்சியாக ஷிவானி சொல்ல சொல்ல செய்து காட்டிய சுரேஷ் தாத்தா, கடைசியாக காதல் என்று வந்ததும் அர்ச்சனா அக்காவை பார்த்து நடித்துக் காட்டியதை பார்த்த சக போட்டியாளர்கள் கிண்டல் பண்ண, அர்ச்சனா அக்கா உடனே ஃபிளையின் கிஸ்களை சுரேஷ் தாத்தாவுக்கு பறக்க விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X