அனிதாவால் காண்டான அர்ச்சனா.. விஷப்பூச்சி சோம்பேறி என்று பெயர் வைத்த ரமேஷ்.. என்னாக போகுதோ!
சென்னை: தன்னை பாஸ்ஸி குமார் என அனிதா கூறியதால் கடுப்பானார் அர்ச்சனா.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது. லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான இந்த டாஸ்கின் முதல் பகுதி நேற்றும் தொடர்ந்தது.
காலை பிரேக் ஃபாஸ்ட் முடித்ததும், அர்ச்சனாவை ரோபோ டிரெஸை போடும்படி கூறினார் அனிதா.

பாஸ்ஸி ரோபோ
அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா தன்னை பாஸ்ஸி ரோபோ என்ற கூறியதை குத்திக் காட்டுவது போல் பேசினார். அதாவது நேத்தும் இதுக்கு அப்புறம்தான் போட்டேன். நிச்சயமா போடுறேன் பாஸ்ஸி ரோபோ கரெக்ட்டா அதோட வேலையை செய்யும் என்றார்.

ஏன் கோச்சுக்குறீங்க?
இதனைக் கேட்ட அனிதா, விளையாட்டா சொன்னதெல்லாம் ஏன் இவ்ளோ சீரியஸா எடுத்துக்குறீங்க, இதுக்கு போய் ஏன் கோச்சுக்குறீங்க என்றார். அதற்கு நான் கோச்சுக்கலையே, நான் சாதாரணமாதான் பேசுறேன் என்றார் அர்ச்சனா.

முகத்துல காட்ட மாட்டீங்க
அர்ச்சனா சொன்னதை கேட்ட அனிதா, கோச்சுக்கலைன்னா அந்த வார்த்தை ஏன் இங்க வரணும்? சோம்க்கூட தான் பப்பட் ரோபோன்னு பேரு வச்சுருக்கோம். அவன் எதுவுமே சொல்லலையே.. நீங்க எப்போவுமே கோவத்த முகத்துல காட்ட மாட்டீங்க ஆனா கோச்சீப்பீங்க என்றார்.

ஏன் கோச்சுக்றீங்களாவா?
இதனை தொடர்ந்து சோஃபாவில் அமர்ந்திருந்த ரமேஷிடம் பேசிய அர்ச்சனா, பாஸ்ஸி ரோபோன்னு சொல்றதுக்கு ஏன் கோச்சுக்றீங்க என்று கேட்கிறார் அனிதா. எனக்கு வச்ச பேரை சொல்லும்போதே உன்னால ஏத்துக்க முடியல? ஏன் கோச்சுக்றீங்களாவா?

விஷப்பூச்சி சோம்பேறி
ஒரு லிமிட் வரைக்கும் தான் அது ஜோக். அதுக்கு அப்புறம் ஹர்ட் ஆக்கிடும் என்று என்றார். அர்ச்சனா பேசியதை கேட்ட ரமேஷ், அதுக்கு நாங்க ஒரு பேர் வச்சுருக்கோம் விஷப்பூச்சி சோம்பேறி என அனிதாவுக்கு வைத்த பெயரை கூறினார்.


Click it and Unblock the Notifications











