போங்காட்டம் ஆடிய பாலா.. அர்ச்சனாவுக்கு உச்சிக்கு ஏறிய கோபம்.. பேன்ட்டை கழட்ட உத்தரவு போட்டார்!

சென்னை: பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கை படு ஜாலியாக கொண்டு சென்று இருக்கலாம். ஆனால், பாலாஜி போங்காட்டம் ஆடி டோட்டலாக சொதப்பி விட்டார்.

பாட்டியாக நடித்த அர்ச்சனா எவ்வளவு கேட்டும் பத்திரத்தை தர மாட்டேன் என சொன்னதையே சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்க பிக் பாஸ் அந்த டாஸ்க்கையே சட்டென முடித்து விட்டார்.

பாலா மீது அர்ச்சனாவுக்கு கோபம் அதிகரித்தாலும், டாஸ்க்கில் இருப்பதால், அத்தனை பொறுமை காத்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

பத்திரம் மிஸ்சிங்

பத்திரம் மிஸ்சிங்

லாக்கரில் இருந்த பத்திரத்தை ரம்யா பாண்டியன், சோம், கேபி டீம் பிளான் பண்ணி திருடினார்கள். அவர்கள் திருடியது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பாலா, அந்த பத்திரத்தை எடுத்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த பின்னரும், திருடன் பத்திரத்தை தராமல் விளையாடுவது ஃபேர் கேமே கிடையாது.

அம்மா கேக்குறேன் கொடுடா

அம்மா கேக்குறேன் கொடுடா

பாலாவிடம் பத்திரம் இருக்கும் விஷயம் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் தெரிந்தது. பாட்டியாக நடித்த அர்ச்சனா, அவரிடம் பேச்சுக் கொடுத்து பத்திரத்தை கேட்டார். பத்திரத்தை தந்ததும் சொத்துக்களை பிரித்துத் தருவதாகவும் வாக்கு கொடுத்தார். அர்ச்சனா பாட்டி கேக்குறேன் என்றும், அம்மா கேக்குறேன் கொடுடா என்று அவ்வளவு அன்பாக கேட்டும் பாலா முரண்டு பிடித்தே வந்தார்.

போங்காட்டம்

போங்காட்டம்

பாலாஜி முருகதாஸ் கையில் பத்திரம் சென்றதும், அவர் போட்ட சீன் இருக்கே, நாற்காலி ஒன்று போட்டு உட்கார்ந்து கொண்டு, பத்திரம் என் கிட்ட தான் இருக்கு, நான் சொல்ற படி தான் இந்த வீட்ல இருக்கவங்க கேக்கணும், பாட்டியும் நான் சொல்ற மாதிரி தான் ஆடணும் என போங்காட்டம் ஆடியது யாருக்குமே பிடிக்கவில்லை.

பேன்ட்ட கழட்டுங்கடா

பேன்ட்ட கழட்டுங்கடா

பாலாஜி முருகதாஸ் பண்ண அட்டகாசங்களை மனதில் வைத்துக் கொண்டு, அவரை பழிவாங்கும் விதமாக ரியோவிடமும், சோமசேகரிடமும், பாலாவின் பேன்ட்டை கழட்டியாவது பத்திரத்தை எடுங்க, அவனை அடிச்சிப் போட்டு பத்திரத்தை வாங்கிட்டு வாங்க என மறைமுகமாக சண்டையை மூட்ட பக்கா பிளான் போட்டார்.

சுதாரித்த ரியோ

சுதாரித்த ரியோ

மாமியாரே.. நான் சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க, பாலாவை அப்படி ஃபோர்ஸ் பண்ணி பிடுங்கிறது சரின்னு எனக்கு படலை. அவன் இஷ்டத்துக்கே பண்ணட்டும், பிக் பாஸ் பாத்துக்குவாரு என அர்ச்சனாவின் அடிதடி திட்டத்தை அழகா ஆஃப் பண்ணி விட்டார். பாலாவுடன் சண்டை போட தயாரான சோமின் ஆசையையும் ரியோ சரியாக செயல்பட்டு நிறுத்தினார்.

சட்டென கேமை முடித்த பிக் பாஸ்

சட்டென கேமை முடித்த பிக் பாஸ்

கடைசி வரைக்கும் லாக்கரில் இருந்த சொத்து பத்திரத்தை யார் எடுத்தார் என பாலாவால் மட்டுமின்றி பாட்டியாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. சொன்னதையே சொல்லிக் கொண்டு கடுப்பேற்றிய பாலாவிடம், நான் தான் எடுத்தேன் என அர்ச்சனாவும், நான் தான் எடுத்தேன் என சுச்சியும் மொக்கைப் போட்டுக் கொண்டிருக்க, கடைசி வரைக்கும் சோம், ரம்யா டீம் வாயே திறக்கவில்லை. கேமை கேமாக பாலா கொண்டு செல்லாமல் தடுத்ததை அறிந்து கொண்ட பிக் பாஸ் அதனை உடனடியாக அப்படியே நிறுத்தி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X