பப்பரப்பான்னு படுத்த அர்ச்சனா.. ஆஸ்கர் அவார்டா கொடுக்கிறாங்க.. கமல் ரியாக்ஷன் செம.. தாத்தா ஆவி!

சென்னை: சுரேஷ் தாத்தா போல நடிக்க சொன்ன இடத்தில் ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் போல அந்த அளவுக்கு நடித்து கமலையே ஆடிப்போய் உட்கார்ந்து பார்க்க வைத்து விட்டார் அர்ச்சனா அக்கா.

நேற்றைய எபிசோடில் எதிர்பார்த்த படியே பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறுவதற்கு முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள், இதற்காக இருக்கலாம், இதற்காக இருக்கக் கூடாது என மற்றவர்களை இமிடேட் பண்ணும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பாலாஜிக்கு ஆரி

பாலாஜிக்கு ஆரி

முதல் ஆளாக அந்த போட்டியில், போட்டோவை எடுத்த பாலாஜி முருகதாஸுக்கு ஆரியின் புகைப்படம் வர, நடிகர் ஆரி மீது உள்ள அத்தனை வெறுப்பையும் நடிக்கிறேன் என்கிற பெயரில் பாலாஜி பண்ணிக் காட்டியது பச்சையாக தெரிந்தது. ஆனால், ஆரி கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், முகம் மாறாமல் பாலாஜியின் பர்ஃபார்மன்ஸை ரசித்துப் பார்த்தார்.

பாலாஜியை வச்சு செய்த ரியோ

பாலாஜியை வச்சு செய்த ரியோ

அதே போல, பாலாஜி முருகதாஸ் மேல செம காண்டில் இருக்கும் ரியோ ராஜுக்கு, சொல்லி வைத்தது போலவே பாலாஜியின் போட்டோ வர, பாலாஜி போலவே இமிடேட் பண்ணி, பாலாஜியின் ஒட்டுமொத்த ஆட்டிட்யூட்டையும் ஆஜீத்தை கைப்பாவையாய் பயன்படுத்துவதையும் நடித்து அசத்தினார். அவ்ளோ வெறுப்பு நம்ம ரியோவுக்கு பாலா மேல.. இதுக்குமேல இருக்கு!

தாத்தா ஆவி

தாத்தா ஆவி

அர்ச்சனா அக்காவுக்கும் எதிர்பார்த்த மாதிரி சுரேஷ் சக்கரவர்த்தியின் போட்டோ வந்தது. தாத்தாவின் தலையில் கட்டியிருந்த துண்டையும், அவரது ஆசியையும் வாங்கிக் கொண்டு, விஜயதசமி நிகழ்ச்சியில் ஆத்தா வந்தது போல நடித்த அர்ச்சனா, இப்போ தாத்தா ஆவியை உள்ளே நுழைத்துக் கொண்டு தன்னையும் மறந்து நடித்தார்.

பப்பரப்பான்னு படுத்த அர்ச்சனா

பப்பரப்பான்னு படுத்த அர்ச்சனா

பாலா நீ அப்படி பண்ணாத, அப்படின்னு நான் சொல்லுவேன்.. ஆனால், நீ அதை தான் பண்ணனும், சனம் கிச்சன் ஏரியால என்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டா வா, நான் தூங்க போறேன்னு, நடு ஹாலில் அனைவரது முன்னாடியும் தாத்தா தூங்குவதை இமிடேட் பண்ணுவதாக பப்பரப்பான்னு படுத்த அர்ச்சனாவை பார்த்து கமலே ஒரு செகண்ட் ஆடிப்போயிட்டார்.

ஆஸ்கர் அவார்டா கொடுக்கிறாங்க

ஆஸ்கர் அவார்டா கொடுக்கிறாங்க

அப்புறம் தாத்தா ஏன் வெளியே போகணும் என்பதற்காக அந்நியன் விக்ரம் மாதிரி நொடிக்கு நொடி மாறி மாறி சுரேஷ் தாத்தா கூட இப்படி பர்ஃபார்ம் பண்ணமாட்டார், அந்த அளவுக்கு அர்ச்சனா நடித்ததை ஆடிப் போய் உட்கார்ந்து பார்த்த கமலின் ரியாக்‌ஷன், ஆஸ்கர் அவார்டா கொடுக்கிறாங்க, ஏன் இப்படி நடிக்கிற என்பது போலவே இருந்தது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Unseen Video | Day 23 • 'என்ன நினச்சினு இருக்க' Shivani ஆவேசம்
உஃபுன்னு ஊதித் தள்ளிட்டாரு

உஃபுன்னு ஊதித் தள்ளிட்டாரு

வேல்முருகன் பெயர் சொன்ன உடனே அழுகையை ஆரம்பித்து வைத்துக் கொண்ட அர்ச்சனா, அவர் போகும் போது வெடித்து அழுதார். வேல்முருகன் வெளியே போன அடுத்த செகண்ட், உஃபுன்னு ஊதித் தள்ளிட்டு, அந்த ஒரு நொடி அர்ச்சனா தனது ரியல் முகத்தை காட்டினார். உடனே கேமராவை பார்த்து விட்டு, மீண்டும் அழுவது போல வந்து படுத்துக் கொண்டார். சும்மா இரு வேலு, சும்மா இரு வேலுன்னு அவரை அனுப்பியாச்சு, அடுத்து இந்த சுரேஷ், பாலா, ரியோவை ஓட்டிட்டோம்னா, குழந்தைங்கள சமாளிச்சு ஜெயிச்சிடலாம் என அர்ச்சனா நல்லாவே திட்டம் போட்டு விளையாடுறார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X