ராக்கி பாயின் அம்மாவாக நடித்தது யார் தெரியுமா?.... கேஜிஎஃப் 2 சுவாரசியத் தகவல் !

சென்னை : கேஜிஎஃப் 2 படத்தில் யாஷின் அம்மாவாக நடித்த நடிகை குறித்த சுவாரசியத் தகவல் வெளியாகி உள்ளது.

தென்னந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் வெற்றி குறித்து ஆங்காங்கே பேசி வருகிறார்கள்.

கேஜிஎஃப் படத்தில் யாஷின் அபரிமிதமான நடிப்பு யாஷை இந்திய அளவில் ஒரு ஸ்டாராக மாறியுள்ளது.

கேஜிஎஃப்

கேஜிஎஃப்

கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கேஜிஎஃப் சேப்டர் 2 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியானத் இத்திரைப்படம் கோடிக்கணக்கில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

உழைப்பு வீண் போகாது

உழைப்பு வீண் போகாது

கன்னட நடிகரான யாஷ் ஒரு பான் இந்தியா ஸ்டாராக ஆகி விட்டார். இந்த திரைப்படத்திற்காக 6 வருடங்களாக வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இந்த திரைப்படத்திற்காக யாஷ் கடுமையாக உழைத்துள்ளார். உழைப்பு என்றுமே வீண்போகாது என்பதை கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் வெற்றி நிரூபித்துள்ளது.

மிரட்டலான நடிப்பு

மிரட்டலான நடிப்பு

தாடி, மீசை, திடமான தேகத்துடன் ஆக்ஷன் காட்சிகள் திரையரங்கை அடித்து நொறுக்க மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் யாஷ். இந்த கதாபாத்திரத்தில் யாஷை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

அர்ச்சனா ஜோய்ஸ்

அர்ச்சனா ஜோய்ஸ்

கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு யாஷ் காரணமாக இருந்தாலும், படத்தில் வரும் அம்மா சென்டிமென்ட் மற்றொரு முக்கிய காரணம். கேஜிஎஃப் படத்தில் அம்மாவாக நடித்தவரின் பெயர் அர்ச்சனா ஜோய்ஸ். கதக் நாட்டிய கலைஞரான இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். இதையடுத்தே, இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Recommended Video

K.G.F: Chapter 2 Review in Tamil | கே ஜி எஃப் 2 விமர்சனம் | Yessa ? Bussa ? | |Yash | Sanjay Dutt
துணிச்சலான நடிப்பு

துணிச்சலான நடிப்பு

வெறும் 27 வயதே ஆன, அர்ச்சனா ஜோய்ஸ் மகாதேவி என்ற கன்னட சீரியல் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து, கேஜிஎஃப் முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, முதல் படத்திலேயே துணிச்சலுடன் போராடும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அர்ச்சனா ஜோய்ஸ் நடிப்பை சோஷியல் மீடியாவில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X