தல 61 படத்தை பற்றி வந்த வதந்தி.. அதிரடியாக மறுத்த அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

சென்னை: தளபதி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தல அஜித்தின் 61வது படத்தை தயாரிக்கப் போவதாக பொய்யான தகவல்கள் பரவிய நிலையில், அதனை அதிரடியாக மறுத்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இயக்குநர் பற்றிய வதந்தி

இயக்குநர் பற்றிய வதந்தி

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அடுத்ததாக நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குவார் என வதந்திகள் பரவின. பின்னர், சிம்பு படத்தை இயக்க உள்ளார் என்றும் புரளிகள் கிளம்பின. இந்நிலையில், தற்போது தல அஜித்தின் 61வது படத்தின் இயக்குநரே இவர் தான் என்றும் கிளப்பி விட்டுள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம்

ஏஜிஎஸ் நிறுவனம்

அதே போல, இந்த படத்தை தளபதி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க போகிறது என்ற ரூமர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க, சில மீடியாக்களும், அதை அப்படியே செய்தியாக்கி அடித்து விட்டன. ஆனால், அது முற்றிலும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதிரடியாக மறுத்த அக்கா

அதிரடியாக மறுத்த அக்கா

இந்நிலையில், அக்கா அர்ச்சனா கல்பாத்தி, 2020ம் ஆண்டு எந்தவொரு புதுப் படத்தையும் தயாரிக்க நாங்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. சில தவறான வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வருவதை பார்த்தேன். அதனை தடுத்து நிறுத்தவே இந்த ட்வீட் என தெளிவு படுத்தி உள்ளார்.

யாரிடமும் இல்லை

யாரிடமும் இல்லை

தல 61 படம் என்று நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக யாரிடமும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை நாங்க நடத்தவில்லை என்றும், நல்ல சூழலுக்காக காத்திருக்கிறோம் என்றும் அர்ச்சனா கல்பாத்தி மற்றொரு ட்வீட் ஒன்றை போட்டு, தனது நிலைப்பாட்டையும் விளக்கத்தையும் கூறியுள்ளார்.

Recommended Video

LOCKDOWN ல SHOOT பண்ண முதல் படம் | ACTOR THALAIVASAL VIJAY EXCLUSIVE | FILMIBEAT TAMIL
ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தல அஜித் படம் ரெடியாகப் போகிறது என்ற வதந்தி வெளியானதும், அஜித் ரசிகர்கள் சந்தோஷப் பட்டனர். ஆனால், அதை ஒரே அடியாக போட்டு அக்கா அர்ச்சனா உடைத்து உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களை ட்ரோல் பண்ண இரு தரப்புக்கும் இடையே ட்விட்டர் வார் மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X