நேசமணி உசுருக்கு போராடும்போது 'தளபதி 63' அப்டேட் கேட்குதா?: தயாரிப்பாளர் கலாய்

By Siva

சென்னை:கான்டிராக்டர் நேசமணி சீரியஸாக இருக்கும் இந்த நேரத்தில் தளபதி 63 அப்டேட் கேட்கக் கூடாது என்று அந்த படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி விஜய் ரசிகர்களை கலாய்த்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடித்து வரும் படம் தளபதி 63. படத்திற்கு அட்லி இன்னும் தலைப்பு வைக்காவிட்டாலும் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு தலைப்பு வைத்து, போஸ்டர்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Archana Kalpathi makes fun of Vijay fans

தளபதி 63 பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதி 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியிடம் படம் குறித்து அப்டேட் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அர்ச்சனாவோ, இது தளபதி 63 பற்றி அப்டேட் கேட்கும் நேரம் இல்லை, நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்று கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.

மருத்துவமனையில் நேசமணி நலமாக உள்ளாராம். 2 இட்லி, கலக்கி எல்லாம் சாப்பிட்டுவிட்டு தெம்பாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் நீங்கள் அப்டேட் கொடுங்க அக்கா என்று விஜய் ரசிகர்கள் அர்ச்சனாவிடம் கேட்டுள்ளனர்.

சிலரோ, நாங்களே எங்க கான்டிராக்டர் நேசமணிக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற சோகத்தில் உள்ளோம். அதனால் அந்த சோகத்தை மாற்றி ஆறுதல் அளிக்க தளபதி 63 அப்டேட் விடுங்க என்று தந்திரமாக கேட்டுள்ளனர்.

நீங்க அப்டேட் கொடுத்தால் நேசமணி அண்ணன் பிழைத்துக் கொள்வார். அதனால் அவருக்காக உடனே அப்டேட் கொடுங்க அக்கா என்று விஜய் ரசிகர்கள் அர்ச்சனா வழியிலேயே அவரை மடக்கிவிட்டனர். அப்டேட் கேட்டு கேட்டு தொண்டத் தண்ணியே வத்திருச்சுக்கா, நேசமணி மீது உண்மையான அக்கறை இருந்தால் அப்படேட் விட்டுட்டு வேறு வேலையை பாருங்க என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஷப்பபா, ஒரு அப்டேட்டுக்கு எப்படி எல்லாம் கெஞ்ச வேண்டி இருக்கு.

அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் அப்டேட் கேட்டும், சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. அப்டேட் கேட்டும் கெஞ்சிக் கதறி ஓய்ந்து போனார்கள். பாவம், தற்போது அதே நிலை விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X