கோட் படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்னாடியே பல கோடி லாபமா?.. அர்ச்சனா கல்பாத்தி அசத்துறாரே!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படம் என அர்ச்சனா கல்பாத்தி டிராகன் படத்தின் புரமோஷனுக்காக அளித்து வரும் பேட்டிகளில் கூறி வருகிறார். கோட் படத்தின் தியேட்டர் வசூலை போலவே 'நான் தியேட்டரிக்கல்' பிசினஸ் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது என்றும் கூறியுள்ளார்.
அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் சொதப்பி வரும் நிலையில், அந்த படத்தின் வசூல் 150 கோடி ரூபாய் முதல் 180 கோடி ரூபாய் தான் உலகளவில் வரும் என்கின்றனர். அஜித் குமாருக்கே இந்த படத்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் என தகவல்கள் வெளியாகின.

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தியேட்டரிலேயே 350 கோடி வசூலை பெற்று 100வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் எல்லாம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோட் படத்தின் வசூல் குறித்து அர்ச்சனா கல்பாத்தி பேசி வருவதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.
455 கோடி வசூல்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் தியேட்டரில் மட்டும் 455 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். அந்த கலெக்ஷன் பொய்யென அஜித் ரசிகர்கள் கலாய்த்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் எங்க நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனம் அப்படி பொய்யான பாக்ஸ் ஆபீஸ் வசூலை சொல்ல முடியாது என்றும் அனைத்து தியேட்டர்களும் 2024ம் ஆண்டு இறுதியில் அதிக வசூல் செய்த படமாக கோட் படத்தை ஏன் முதலிடத்தில் வைத்தது என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.
நான் தியேட்டரிக்கல் பிசினஸ்: விஜய் போன்ற பெரிய ஹீரோக்கள் படம் என்றால் ரிலீஸுக்கு முன்பாக நடக்கும் பிசினஸிலேயே போட்ட முதலீட்டை அள்ளிவிடுவோம். கோட் படத்தின் தியேட்டரிக்கல் வசூல் குறித்து தான் பலருக்கும் தெரியும். நான் தியேட்டரிக்கல் பிசினஸ் மிகப்பெரிய லாபத்தை எங்கள் நிறுவனத்துக்கு அளித்துள்ளது என பரத்வாஜ் ரங்கனிடம் அளித்த புதிய பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிப்பதை விட்டுடாதீங்க தளபதி: கோலிவுட்டில் இப்படியொரு தியேட்டரிக்கல் மற்றும் நான் தியேட்டரிக்கல் பிசினஸ் கோட்டையை கட்டி வைத்துக் கொண்டு அரசியலுக்கு ஏன் போறீங்க தளபதி, சினிமாவில் இன்னமும் சில படங்கள் நீங்க நடிக்க வேண்டும் என அந்த பேட்டியின் வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
டிராகன் வசூல் எப்படி இருக்கும்?: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 10 கோடிக்கும் அதிகமான வசூலை பாக்ஸ் ஆபீஸில் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டிய நிலையில், அவரது அடுத்த படமான டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து 34 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார். பிரதீப் ரங்கநாதனின் இந்த படம் 100 கோடி வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்த வெற்றிப் படமாக இது மாறுமா என்பது இந்த வாரம் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











