விஜய்க்கு 200 கோடி சம்பளம் ஏன்? ’கோட்’ படத்தின் ரியல் பட்ஜெட் என்ன? அர்ச்சனா கல்பாத்தி பேட்டி!

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப் நடித்த பிகில் திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 180 கோடி என சொல்லப்படும் நிலையில், அந்த படத்தின் வசூல் 300 கோடியாக வந்தது. மீண்டும் தளபதி விஜய்யை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த விஷயங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை விட அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உள்ளார். 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்துக்கு விஜய்யின் சம்பளம் 200 கோடி என பலரும் சொல்லி வந்த நிலையில், அதனை அர்ச்சனா கல்பாத்தியே உறுதி செய்துள்ளார்.

goat vijay archana kalpathi

விஜய்க்கு ஏன் அத்தனை கோடிகள் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என்பது குறித்தும் கோட் படத்தின் ரியல் பட்ஜெட் என்ன என்பது குறித்தும் சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் மட்டுமல்ல ரசிகையும்: தளபதி விஜய்யை வைத்து பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், அந்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி தான் ரசிகர்களுக்கு அத்தனை அப்டேட்களையும் போடுறா வெடிய என ட்வீட் போட்டு கொடுத்து வந்தார். அதே போல 'கோட்' படத்தின் அப்டேட்களையும் சரியான நேரத்தில் கொடுத்து ரசிகர்களை கடைசி வரை ஹைப்பில் வைத்து வருகிறார்.

ரோகிணி, மாயாஜால் ஹவுஸ்ஃபுல்: கோட் படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஓவர்சீஸில் தொடங்கியது போல சென்னையில் ரோகிணி தியேட்டர் மற்றும் மாயாஜால் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஆரம்பித்து விட்டது. ரோகிணி மற்றும் மாயாஜால் தியேட்டரில் முதல் நாளுக்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன.

400 கோடி பட்ஜெட்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் பட்ஜெட் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 400 கோடி வந்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

goat vijay archana kalpathi

200 கோடி சம்பளம் ஏன்?: பிகில் படத்திற்கு பிறகு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, நார்த் இந்தியா, ஓவர்சீஸ் என அனைத்து இடங்களிலும் தளபதியின் மார்க்கெட் தாறுமாறாக ஏறியது தான் அவருக்கு இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும் லியோ படத்தை போலவே கோட் படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

டீ ஏஜிங் விமர்சனம்: வயதான விஜய்க்கும் இளைஞர் விஜய்க்கும் இடையே வித்தியாசம் காட்டுவதற்காக கொஞ்சம் ஜா லைன் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தோம். ஆனால், அப்பவே விஜய் சார் ரொம்ப சேஞ்ச் பண்ணாதீங்க, என்னை மாறியே காட்டிடுங்க என்றார். ஸ்பார்க் பாடலில் இடம்பெற்ற தோற்றத்தை பார்த்து விட்டு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், மீண்டும் அதற்காக கொஞ்சம் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருந்தது. படமாக நாங்கள் பார்க்கும் போது யங் விஜய்யின் அட்டகாசம் தான் எங்களுக்கு பிரம்மிப்பாக இருந்தது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் அதை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X