லைகாவுக்கு புரிஞ்சா சரி.. இந்தியன் 2, விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் தோல்வி.. அர்ச்சனா கல்பாத்தி உஷார்!
சென்னை: பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் போது இந்த விஷயத்தை மட்டும் தான் நான் கடைபிடிப்பேன் என அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் லைகா நிறுவனத்துக்குத்தான் இந்த அட்வைஸ் இப்போதைக்கு ரொம்பவே தேவைப்படுகிறது என ட்ரோல் செய்து வருகின்றனர்.
தளபதி விஜய்யை வைத்து பிகில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படங்களை எடுத்த ஏஜிஎஸ் நிறுவனம் லவ் டுடே படத்தைத் தொடர்ந்து மீண்டும் பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் எனும் படத்தை எடுத்துள்ளனர். அடுத்த வாரம் அந்த படம் திரைக்கு வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி பணம் போட்டு படத்தை எடுப்பது மட்டும் தனது வேலை என விட்டு ஒதுங்காமல் நடிகர்கள், இயக்குநர்கள், ஹீரோயின்களை போல இவரும் களத்தில் இறங்கி புரமோஷன் செய்து தனது படங்களை வெற்றியடைய வைத்து வருகிறார்.
இந்தியன் 2 முதல் விடாமுயற்சி வரை: கடந்த ஆண்டு லைகா தயாரிப்பில் வெளியான லால் சலாம், இந்தியன் 2, மிஷன் சாப்டர் 1, வேட்டையன் மற்றும் இந்த ஆண்டு வெளியான விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தன. லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமோ பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமோ அமையவில்லை.
பெரிய படங்களின் தோல்வியை எப்படி பார்க்குறீங்க?: ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். டிராகன் படத்தின் புரமோஷனுக்காக வந்த அவரிடம் இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி உள்ளிட்ட பெரிய படங்கள் தோல்வியை தழுவ என்ன காரணம் என்கிற கேள்வியை முன் வைத்தனர். ஆனால், எந்தவொரு படத்தையும் குறிப்பிடாமல், பொதுவாகவே பெரிய ஸ்டார் படங்கள் என்றால் எக்ஸ்பிரீமெண்ட் அதிகம் பண்ணாமல், ரசிகர்களுக்கு பிடித்த படமாக கொடுத்தாலே போதும். ஏஜிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில் கன்டென்ட்டுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். கன்டென்ட் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தால் தான் அந்த புராஜெக்டிலேயே பணியாற்றுவோம் என்றார்.
ரொம்ப உஷார்: நான் ஒரு ஆடியன்ஸாகத்தான் படங்களை பார்ப்பேன். ரிஸ்க் எடுக்காமல் படங்களை பண்ணுகிறோம் என்கிற விமர்சனம் எங்கள் நிறுவனத்தின் மீதும் உள்ளது. ஆனால், ரிஸ்க் எடுத்து லாஸ் ஆனால், யாருமே வந்து உதவமாட்டார்கள். அதன் காரணமாக பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே உஷாராக என்டர்டெயின்மென்ட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து விடுவேன் என்றார்.
நோட் பண்ணுங்க லைகா: அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து அட்டகாசமான படங்களை கொடுத்து பேக் டு பேக் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து வரும் நிலையில், லைகா நிறுவனம் இந்த ஃபார்மூலாவை பின்பற்றினால் நல்ல வசூல் வேட்டை குவிக்கும் படங்களை கொடுக்கலாம் என்றும் வேட்டையன், விடாமுயற்சி என சோதனை முயற்சியில் ஈடுபட்டால் அந்த நிறுவனத்துக்கு சோதனை காலம் தான் வரும் என்றும் கலாய்த்து வருகின்றனர். 37 கோடி ரூபாய் மதிப்பில் டிராகன் படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் வெளியாகும் அந்த படம் 100 கோடி வசூலை குவிக்குமா என்பதை காண சினிமா உலகமே காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











