கெடா விருந்து கன்ஃபார்ம்.. GOAT டைட்டில் லீக்?.. இப்போ மட்டும் அமைதியான அர்ச்சனா கல்பாத்தி!
சென்னை: தளபதி 68 படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் உடன் ரெடியாகி விட்டதாகவும் வரும் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சில தலைப்புகள் வெளியாகி இதுதான் உறுதியான டைட்டில் என டிரெண்டாகி வருகின்றன. முதலில் வெளியான சில தலைப்புகளை இல்லையென அதிரடியாக மறுத்த அர்ச்சனா கல்பாத்தி கடைசியாக வெளியாகி உள்ள டைட்டிலுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு விஜய்க்கு பீஸ்ட் படம் மட்டுமே வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடி விழுந்தது. ஆனால், இந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வசூல் நாயகனாக விஜய்யை மாற்றியுள்ளது.

தளபதி 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி மற்றும் வெங்கட் பிரபு டீம் உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, தாய்லாந்த், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்து இலங்கைக்கு படக்குழுவினர் செல்ல உள்ளனர்.
அந்த டைட்டில் இல்லை: பாஸ் மற்றும் பஸல் என இரு டைட்டில்கள் முதலில் உலா வந்த நிலையில், அந்த இரு தலைப்புகளும் இல்லை என கெத்தாக அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி எல்லாம் ட்வீட் போட்டு வெங்கட் பிரபு பெருசா ஒன்றை கிண்டிக் கொண்டிருக்கிறார். சரியான நேரத்தில் சர்வ் செய்யப்படும் என்றார்.
கோட் தான் டைட்டில்: ஆனால், உடனடியாக GOAT டைட்டிலை தான் வெங்கட் பிரபு வைத்திருக்கிறார் என்கிற தகவலும் லீக் ஆகி விட்டது. ஆனால், இதுவரை அதுதொடர்பான மறுப்பு அறிக்கை ஏதும் அர்ச்சனா கல்பாத்தி வெளியிடாத நிலையில், அந்த டைட்டில் தான் ஒரிஜினல் டைட்டில் என ரசிகர்கள் திட்டவட்டமாக நம்ப ஆரம்பித்து விட்டனர்.
விஜய் முடிவு: இந்த டைட்டில் லீக் ஆன நிலையில், இன்னொரு டைட்டிலை மாற்றலாமா என வெங்கட் பிரபு கேட்க இதே நல்லா இருக்கு ரசிகர்களுக்கு கெடா விருந்து போட்டுடுவோம் என்றே சொல்லி ஓகே சொல்லி விட்டதாக தற்போது லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











