இந்த ஆப்புக்கு காரணம் அர்ச்சு அக்கா போட்ட அந்த ட்வீட் தானா? பயங்கர கடுப்பில் விஜய் ஃபேன்ஸ்!

Recommended Video

Thalapathy Vijay in Tragedy | Master Shooting Spot | Vijay Sethupathi

சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

காலை முதலே ஏஜிஎஸ் நிறுவனத்திடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக விஜய்யிடமும் சோதனை நடைபெறுகிறது.

சமீபத்தில் பிகில் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின் போது அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட் தான் இதற்கு காரணமா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

பிகில் பட்ஜெட்

பிகில் பட்ஜெட்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படம் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் அதிக பட்ஜெட்டில் படமாக்கப்பட்டதாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான பிகில் படம் அதிக அளவு வசூலித்த படமாகவும் அறிவிக்கப்பட்டது.

100வது நாள்

100வது நாள்

இந்நிலையில், கடந்த ஜனவரி 29ம் தேதி பிகில் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். பிகில் படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் அவ்வப்போது ட்விட்டரில் கொடுத்து வந்த கிரியேட்டிவ் புரொடியூசரான அர்ச்சனா கல்பாத்தி அப்போது ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

அர்ச்சனா ட்வீட்

இந்த வாரம் பிகில் திரைப்படம் 100வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. தளபதி ரசிகர்கள் இன்றி இந்த மாபெரும் மைல்கல் சாத்தியம் ஆகி இருக்காது. கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் மற்றும் பல டிரெண்டிங் சாதனைகளை நிகழ்த்திய படம் விஜய்யின் பிகில் தான் என ட்வீட் போட்டிருந்தார்.

300 கோடி பிரச்சனை

300 கோடி பிரச்சனை

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த தீபாவளிக்கு கைதி படத்துடன் போட்டியாக ரிலீசான இந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தது சர்ச்சையை கிளப்பியது.

விஜய்யிடம் விசாரணை

விஜய்யிடம் விசாரணை

ஜனவரி மாத இறுதியில் அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டை தொடர்ந்து, தற்போது பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய்யிடமும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அட்லீயை விசாரிப்பாங்களா?

அட்லீயை விசாரிப்பாங்களா?

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய்யின் பிகில் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லீ, பிகில் படத்திற்காக அதிகளவில் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இடமும் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வசூல் நாயகன்

வசூல் நாயகன்

கோலிவுட் சினிமாவின் வசூல் நாயகனாக திகழும் நடிகர் விஜய் தற்போது சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படம் ஷூட்டிங் முடியும் முன்னதாகவே 200 கோடி வரை ப்ரீ - பிசினஸ் செய்துள்ளதாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது வருமான வரித்துறை விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X