தளபதி விஜய்யின் கோட் பட வசூல் ஃபேக்கா?.. அர்ச்சனா கல்பாத்தி என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் தனது படங்களின் வசூலை தொடர்ந்து அதிகமாக சொல்லி தமிழ் சினிமாவை ஏமாற்றி வருகிறார் என அவரது ஹேட்டர்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் போர்வையில் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் அதுதொடர்பான கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பதில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மீது முட்டை அடிக்கப் போகிறோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் போர்வையில் சிலர் கிளப்பிவிட்ட சர்ச்சை காட்டுத்தீ போல பரவிய நிலையில், ரஜினிகாந்த் தரப்பில் இருந்தே கண்டன அறிவிப்பே வெளியானது.

சினிமாவை விட்டு அரசியல் பக்கம் விஜய் வந்துள்ள நிலையிலும், தொடர்ந்து அவரை டார்கெட் செய்து ஹேட்டர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தின் வசூல் குறித்த உண்மைத்தன்மையை விளக்கமாக கூறியுள்ளார்.
கோட் வசூல் பொய்யா?: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அர்ச்சனா கல்பாத்தியே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில், அந்த வசூலை ஃபேக் என சொல்கிறார்களே அதுதொடர்பான உங்கள் கருத்து என்கிற கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
அப்படியெல்லாம் சொல்ல முடியாதுங்க: எங்களோட நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனம் அப்படியெல்லாம் பொய்யான பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை வெளியிட முடியாது. அனைத்துமே ஆடிட் செய்யப்படும். கோட் படத்தின் உண்மையான வசூலை மட்டுமே நாங்க சொல்லியிருக்கோம். அந்த படம் மிகப்பெரிய லாபத்தை எங்க நிறுவனத்துக்கு கொடுத்தது என பதில் அளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
அனைத்து தியேட்டர்களிலும் நம்பர் ஒன்: விஜய் சாரோட கோட் படத்தின் வசூல் கணக்கு பொய்யாக இருந்தால், வருஷ கடைசியில் அனைத்து தியேட்டர்களிலும் முதலிடம் பிடித்த படமாக கோட் படம் எப்படி இருக்கும். தயாரிப்பாளர்கள் பொய் சொன்னார்கள் என்றாலும், தியேட்டர் ஓனர்கள் சொல்வதும் பொய்யா? இதெல்லாம் ஹேட்டர்கள் கிளப்பும் விஷயம். விஜய் சாரோட ஸ்டார் வேல்யூவுக்கு அவருடைய படம் பூஜை போடும் போதே பிசினஸ் ஆகிவிடும் என்று அசால்ட்டாக கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. அடுத்ததாக ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த வாரம் டிராகன் படம் வெளியாகவுள்ள நிலையில், அவர் அளித்த பேட்டியில் கோட் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஜன நாயகன் சம்பவம்: தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வெளியாகும் போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை அந்த படம் பண்ணும் என எதிர்பார்க்கின்றனர். இனிமேல், விஜய் படங்கள் வெளியாகாது என்றால் அது நிச்சயம் பல தியேட்டர் ஓனர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படும் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











