Leo Ticket Booking: லியோ டிக்கெட் புக்கிங்.. பிரச்சனை எல்லாம் ஓவர்.. அர்ச்சனா கல்பாத்தி ஹேப்பி!
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் சென்னையில் இன்னமும் பல பிரபல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்காத நிலையில், அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விட்டதாகவும் நாளை காலை ஏஜிஎஸ் சினிமாஸில் லியோ டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என அர்ச்சனா கல்பாத்தி தற்போது ட்வீட் போட்டுள்ளார்.
லியோ படத்தின் சென்னை விநியோகஸ்தர்கள் 80% ஷேர் திரையரங்குகளிலும் கேட்பதால், தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்கிற நிலையில் திரையரங்குகள் 40% ஷேர் வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், லியோ படத்துக்கான முன்பதிவை இதுவரை தொடங்காமல் உள்ளன.

எப்படியாவது காலை 7:00 மணிக்கு காட்சியாவது கிடைத்துவிட்டால் 9 மணி ஷோ போடுவது சிக்கல் ஏற்படும் என்கிற நிலையில், தான் தியேட்டர் ஓனர்கள் இன்னமும் லியோ டிக்கெட் புக்கிங் தொடங்காமல் உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
இன்று மாலைக்குள் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு இன்னமும் தயவு காட்டவில்லை என்றே தெரிகிறது. லியோ திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற ஷோ ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என்கின்றனர்.
சென்னையில் உள்ள ரோகிணி, கமலா, காசி உள்ளிட்ட பல திரையரங்குகள் இன்னமும் டிக்கெட் புக்கிங் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. திருச்சி சினிமாஸ் உள்ளிட்ட சிbல திரையரங்குகள் லியோ படத்தை ரிலீஸ் செய்யவே போவதில்லை என்கிற முடிவுக்கே வந்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











