»   »  'அரவாண்' நாயகி அர்ச்சனா கவி காதல் திருமணம்...காமெடி நடிகரை மணந்தார்

'அரவாண்' நாயகி அர்ச்சனா கவி காதல் திருமணம்...காமெடி நடிகரை மணந்தார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகையான அர்ச்சனா கவி - அபிஷ் மேத்யூ இடையேயான காதல் திருமணம் கடந்த 23ம் தேதி கொச்சியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்றது.

கடந்த 2009 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரை' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அர்ச்சனா கவி.

மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தெலுங்கு (பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட்) மற்றும் தமிழ் சினிமாவிலும் இவர் நடித்திருக்கிறார்.

Archana Kavi marries Abish Mathew

இயக்குநர் வசந்தபாலனின் அரவாண் படத்தில் சிமிட்டி என்ற கதாபாத்திரத்தில், அர்ச்சனா கவி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அரவாண் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஞானக் கிறுக்கன் தமிழில் சரியாகப் போகவில்லை.

இதனால் மீண்டும் மலையாளப் படங்களின் பக்கம் அர்ச்சனா கவியின் கவனம் திரும்பியது.இந்நிலையில் நடிகை அர்ச்சனா கவிக்கும் மலையாள காமெடி நடிகர் அபிஷ் மேத்யூவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சிறு வயதில் இருந்தே இருவரின் குடும்பத்திற்கும் நட்பு இருந்ததால் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Archana Kavi marries Abish Mathew

இதனையடுத்து கடந்த வருடம் அக்டோபர் 31ம் தேதி புது டெல்லியில் குடும்ப நண்பர்கள் புடைசூழ, இருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில் அர்ச்சனா கவி- அபிஷ் மேத்யூ திருமணம் கடந்த 23ம் தேதி கொச்சியில் உள்ள ஒரு ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

Archana Kavi marries Abish Mathew

தொடர்ந்து கொச்சியில் நடந்த திருமண வரவேற்பில் மணமக்களை நடிகைகள் ரீமா கல்லிங்கல், ஆன் அகஸ்டின், மாளவிகா மோகன், ரஞ்சினி ஜோஸ் மற்றும் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

மற்றொரு மலையாள நடிகையான அசின் கடந்த 19 ம் தேதி பிரபல தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
'Aravaan' fame Actress Archana Kavi Married, Malayalam Comedy Actor Abish Mathew in Kochi on Saturday, 23 January.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil