ஓடும் கார் மீது விழுந்த கான்கிரீட் ஸ்லாப்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை

By Siva

கொச்சி: மலையாள நடிகை அர்ச்சனா கவி சென்ற கார் மீது மெட்ரோ ரயில் பாலத்தில் இருந்து ஒரு கான்கிரீட் கல் விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

டெல்லியில் பிறந்து படித்த அர்ச்சனா கவி டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது மலையாள இயக்குநர் லாஸ் ஜோஸ் கண்ணில் பட்டு நடிகையானார். அவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Archana Kavi narrowly escapes in an accident

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ச்சனா கொச்சியில் உள்ள விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்பொழுது கொச்சி மெட்ரோ ரயில் தூணில் இருந்து கான்கிரீட் ஸ்லாப்(கல்) ஒன்று அவர் கார் மீது விழுந்தது. இதில் அர்ச்சனா சென்ற கார் சேதமடைந்தது. நல்ல வேளையாக அவருக்கோ, டிரைவருக்கோ எதுவும் ஆகவில்லை.

இருப்பினும் இந்த சம்பவத்தால் அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் இது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் புகார் செய்தார். இந்த விபத்து குறித்து அர்ச்சனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாங்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினோம். நாங்கள் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஒரு கான்கிரீட் ஸ்லாப் எங்கள் கார் மீது விழுந்தது. கொச்சி மெட்ரோ மற்றும் கொச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி டிரைவருக்கு உரிய இழப்பீடு வழங்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா கவியின் ட்வீட்டை பார்த்த கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, சம்பவம் குறித்து தகவல் அறிய டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இந்த விவகாரம் குறித்து எங்கள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. அசவுகரியத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.

கொச்சி மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள பதிலை பார்த்த நெட்டிசன்கள், இது அசவுகரியம் இல்லை, பாதுகாப்பு விஷயம். கார் மீது விழுந்த கான்கிரீட் ஸ்லாப் அந்த வழியாக இருசக்கர வாகனத்திலோ, நடந்து சென்றவர்கள் மீதோ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X