Bigg Boss 7 Title Winner Archana: பிக் பாஸ் தமிழ் 7 டைட்டிலை அடிச்சுத் தூக்கிய அர்ச்சனா.. சபாஷ்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என கடைசி வரை ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், நேற்றே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என அறிவித்து இருந்தோம். பிக் பாஸ் டைட்டில் வின்னர் மட்டுமின்றி ரன்னர் அப் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.
கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியையும் கலக்கலாக தொகுத்து வழங்கி உள்ளார். இந்த சீசன் ஏகப்பட்ட விமர்சனங்களுடன் கடந்து வந்த நிலையில் ஒரு வழியாக கிராண்ட் ஃபினாலேவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

கலர்ஃபுல்லாக நடந்த கிராண்ட் ஃபினாலே: இவிபி பிலிம் சிட்டியில் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் நேற்றும் இன்றும் நடைபெற்றது. கடைசி வரை லீக்கான தகவல் சரிதானா? இல்லை கடைசி நேரத்தில் ஏதாவது மேஜிக் நடக்குமா? என சோஷியல் மீடியாவில் புலம்பல்கள் அதிகரித்த நிலையிலும் டைட்டில் வின்னர் அவர் தான் என அடித்து நொறுக்கியது போலவே டைட்டிலை அந்த போட்டியாளர் தட்டித் தூக்கியுள்ளார்.
மாயா ரன்னர் அப் கூட இல்லை: இந்த சீசன் டைட்டிலை மாயா தூக்கப் போகிறாரா? அல்லது அர்ச்சனா தூக்கப் போகிறாரா? என்கிற கேள்வி கடைசி வரை விஷ்ணு பேசியதற்கு பிறகும் பிக் பாஸ் ரசிகர்கள் மனங்களிலும் எழுந்தது. அந்தளவுக்கு இந்த சீசன் பல ட்விஸ்ட் மற்றும் டர்ன்களுடன் நகர்ந்து கொண்டே சென்றது. மாயாவுக்கு சேனல் சப்போர்ட் மற்றும் கமல்ஹாசன் சப்போர்ட் இருப்பதாக விமர்சனங்களும் குவிந்தன. ஆனால், அவர் ரன்னர் அப்பாக கூட ஆகாமல் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மாஸ் காட்டிய மணிசந்திரா: ரவீனாவுடன் ஜாலியாக பேசிக் கொண்டே லவ் டிராக் ஓட்டிய மணிசந்திரா பிசிக்கல் டாஸ்க் முதல் அனைத்து விளையாட்டுகளிலும் அசத்தி கடைசி வரை இடம்பெற்ற நிலையில், மக்களின் ஓட்டுக்களையும் அள்ளி உள்ளார். பிக் பாஸ் சீசன் 7ல் கடைசியாக கமல்ஹாசன் அர்ச்சனா மற்றும் மணிசந்திரா கைகளை பிடித்து தூக்கி, இறக்கி வித்தைக் காட்டி கடைசியில் மாயாவின் கையை தூக்கி விட்டார். மணி 2ம் இடத்தை பிடித்து மாஸ் காட்டி உள்ளர்.

டைட்டில் வின்னர் அர்ச்சனா: மணி, தினேஷ், மாயா, அர்ச்சனா உள்ளிட்ட 4 பேர் கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். விஷ்ணு 5வது இடத்தில் வெளியேற தினேஷ் 4வது இடத்தில் வெளியேறினார். மாயாவுக்கு 3வது இடம் மணிக்கு 2வது இடம் கிடைக்க கமல்ஹாசன் கையை தூக்கி உயர்த்தி அர்ச்சனா ரவிச்சந்திரனை பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் என அறிவித்துள்ளார்.
அர்ச்சனாவுக்கு பாராட்டுக்கள்: வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டில் நுழைந்தாலும் பிக் பாஸ் டைட்டில் நல்லா விளையாடினாலும் மக்கள் மனங்களை வென்றாலும் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக அர்ச்சனா மாறியுள்ள நிலையில், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











