வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம்.. ஆனால் வாழ்க்கையே கஷ்டம்னா.. அனிதா கணவரிடம் புலம்பிய அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் அனிதா தங்களை படுத்தி எடுப்பதாக அவரது கணவரான பிரபாவிடம் கூறினார் அர்ச்சனா.

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள அனிதா சிரிப்பதை பார்த்தும் அழுவதை பார்த்தும் ரசிகர்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர்.

ஒருவருடைய சிரிப்பு இரிட்டேட் பண்ணுகிறது என்றால் அது அனிதாவின் சிரிப்புதான் என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அர்ச்சனாவிடம் வம்பு

அர்ச்சனாவிடம் வம்பு

அவ்வப்போது பாயிண்ட் பாயிண்ட்டாக பேசுவதாக நினைத்து ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி வருகிறார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கிட்சன் டீமில் இல்லாத அனிதா, தானும் சப்பாத்தியை உருட்டி தருவதாக கூறி அர்ச்சனாவிடம் வம்பு செய்து கொண்டிருந்தார்.

வாழ்க்கையே கஷ்டம்

வாழ்க்கையே கஷ்டம்

இதனால் பொறுமையிழந்த அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராவை பார்த்து தம்பி பிரபா வெளியே வந்ததும் நான் உங்களை சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் கஷ்டம் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே கஷ்டம் என்றால் என்ன சொல்வது.

சந்தோஷமான நாட்கள்

சந்தோஷமான நாட்கள்

உங்களுடைய பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் பற்றி எனக்கு சொல்வதற்கு வார்த்தையே வரவில்லை. 20 வருடமாக பேசிக் கொண்டிருந்த ஒரு பெண் வார்த்தைகள் வர கஷ்டபடுகிறேன் என்றால் நினைத்து பாருங்கள். இந்த 90 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமான நாட்களாய் இருந்திருக்கும்.

அலேக்காக தூக்கி..

அலேக்காக தூக்கி..

ஆனால் நாங்கள் எவ்ளோ கஷ்டப்படுகிறோம் என்பது எங்களுக்குதான் தெரியும். ஹேட்ஸ் ஆஃப் பிரபா என்று கூறினார். அதன்பிறகும் அனிதா தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் கடுப்பான அர்ச்சனா அவரை அலேக்காக தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பெட் ரூமூக்கு சென்றார்.

 படுக்க வைத்து தாலாட்டு

படுக்க வைத்து தாலாட்டு

பின்னர் அவரை அங்கு படுக்க வைத்த அர்ச்சனா, அவரது வாயில் விரலை வைத்து ஓஓவென தாலாட்டு பாடி தூங்க வைத்தார். என்னதான் சண்டை சச்சரவு என இருந்தாலும் ஹவுஸ்மேட்ஸ் அவ்வப்போது இப்படி கேலியும் கிண்டலுமாய் இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X