காப்பாற்றப்படும் போட்டியாளர் யார்? ஆப்பை அறியாமல் சிரித்தப்படி இருக்கும் அர்ச்சனா.. முதல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி, அர்ச்சனா, அனிதா, ரியோ, சோம், ஆஜித், ஷிவானி, ஆகிய 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றனர்.
அவர்களில் ரியோவும் ஆரியும் காப்பாற்றப்படுவதாக கமல் நேற்றைய எபிசோடில் அறிவித்தார். ஏற்கனவே ஆரியுடன் மல்லுக்கு நின்று வரும் அர்ச்சனா அவர் எப்போது வெளியே போவார் என காத்திருக்கிறார்.

தரக்குறைவாக பேசி
இதனால் வந்த நாள் முதல் தற்போது வரை தன்னுடைய நாமினேஷன் வரிசையில் ஆரியைதான் முதலிடத்தில் வைத்துள்ளார். அதோடு ஆரியையும் தரக்குறைவாக பேசி வருகிறார்.

கடவுள் இருக்கானா குமாரு?
குறிப்பாக கோழிப்பண்ணை டாஸ்க்கின் போது நரியாய் இருந்தாலும் மானஸ்தனாய் இருக்க வேண்டும் என்று கூறி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இந்நிலையில் நேற்று ஆரி காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்ததும், கடவுள் இருக்கானா குமாரு என கேட்டு கிண்டலடித்தார்.

வன்மத்தை கக்கிய ரம்யா
அதற்கு ரம்யாவும் பாலாஜியும் இருக்கான் இருக்கான், தெரியும் ஒரு நாள் தெரியும் என ஆரி மீது வன்மத்தை கக்கினர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

உடைக்கப்பட்ட தங்க முட்டைகள்
அதில் பேசும் கமல், நாமினேஷனில் 4 பேர் இருக்கிறீர்கள் அவர்களில் ஒருவர் இங்கே வரவேண்டும் என்று கூறுகிறார். தொடர்ந்து தங்க நிறத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு முட்டைகளை உடைக்க சொல்கிறார்.

இதில் யார் இருக்க வேண்டும்?
இதில் முதல் ஆளாக ஆரி முட்டையை உடைக்கிறார். அடுத்தடுத்து உள்ள எஞ்சிய மூன்று முட்டைகளை ரியோ மற்றும் பாலாஜி ஆகியோர் உடைக்கின்றனர். தொடர்ந்து பேசும் கமல் இதில் யார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

ஆஜித் சேவ் ஆவார்
அப்போது பாலாஜி, சோம் என்றும் ஆரி ஆஜித் சேவ்வாவார் என்று நினைப்பதாகவும் கூறினார். அப்போது ஆஜித் சீட்டு நுனியில் நகர்ந்து நகர்ந்து உட்கார என்ன ஆஜீத் சீட்டு நுனியில் உட்காருகிறீர்கள் என்று கேட்கிறார்.

சிரித்தப்படியே ரம்யா
மேலும் மக்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் என்று கூறியப்படியே தனது கையில் உள்ள எவிக்ஷன் கார்டை திறந்து ஒரு பேர் உள்ளதா ரெண்டு பேர் உள்ளதா என கூறிக்கொண்டே பார்க்கிறார். உள்ளே இருக்கும் ஆப்பு என்ன என்று தெரியாமல் சிரித்தப்படியே உள்ள அர்ச்சனா ஆஜித் மற்றும் சோமின் கைகளை பற்றியப்படி உள்ளார்.


Click it and Unblock the Notifications











