அர்ச்சனா அமைதியா இல்லை.. சைலன்ட்டா சூப்பர் வேலை செஞ்சிட்டு வராங்க.. மாஸ்டர் பிளானால இருக்கு!

சென்னை: என்ன அர்ச்சனா அப்படியே ஆஃப் ஆகி இருக்காங்களேன்னு நினைக்க வேண்டாம்.

சத்தமே இல்லாமல், சம்யுக்தாவை தன் பக்கம் அழக ஈர்க்கும் வேலையை செய்துவிட்டார் அர்ச்சனா.

கடைசி வரைக்கும் யாருமே அவங்களை நாமினேட் பண்ணாமலே வின் பண்ண என்ன ஒரு மாஸ்டர் பிளான்.

குரூபிசம்

குரூபிசம்

பிக் பாஸ் வீட்டில் குரூபிசம் இருக்கு என நடிகர் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். அதன் பின்னர், பாலாஜிக்கு வேறு வழியில்லாமல், சம்யுக்தாவை வைத்து புதிய குரூப்பை உருவாக்க ஆரம்பித்து விட்டார். இப்போ பிக் பாஸ் வீட்டில் இரண்டு பெரிய குரூப் இருக்கிறது.

அமைதியான அர்ச்சனா

அமைதியான அர்ச்சனா

சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்ட பின்னர், அர்ச்சனா அப்படியே அமைதியாகி விட்டார். நேற்று கிளவுஸ் மற்றும் அட்டைக் கத்தி கொடுக்கும் போது கூட அர்ச்சனாவுக்கு யாருமே எதுவுமே கொடுக்கவில்லை. அதனால், அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் கண்டு கொள்ளப்படாத நபராக மாறி விட்டார் என கமெண்ட்டுகள் வர ஆரம்பித்தன.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

ஆனால், அவர் எவிக்‌ஷன் நாமினேஷனில் சிக்குவதே இல்லை. அப்படியொரு சூப்பரான மாஸ்டர் கேம் ஆடி வருகிறார் அர்ச்சனா என்பதை சில நெட்டிசன்கள் அழகாக கண்டுபிடித்து கமெண்ட் செய்துள்ளனர். கடைசி வரைக்கும் பிக் பாஸ் வீட்டில் இருக்க அர்ச்சனா நல்லாவே மாஸ்டர் பிளான் போட்டு விளையாடி வருகிறார் என்கின்றனர்.

சம்யுக்தாவை சாய்த்துவிட்டார்

சம்யுக்தாவை சாய்த்துவிட்டார்

சம்யுக்தா டஃப் ஆன போட்டியாளர், சம்யுக்தா நல்லவர், வல்லவர் என அர்ச்சனா தொடர்ந்து சம்யுக்தாவுக்கு ஐஸ் வைத்து மொத்தமாக தனது குரூப்பில் சம்யுக்தாவுக்கு தெரியாமல் அர்ச்சனா அவரை வளைத்து விட்டார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இனி பாலா தேவையில்லை

இனி பாலா தேவையில்லை

பாலாஜி முருகதாஸை தன் பக்கம் சேர்க்க வேண்டும் என அம்மா பிள்ளை வேஷம் போட்டார் அர்ச்சனா என்றும், அது சரியாக வொர்க்கவுட் ஆகாத நிலையில், பாலா யாரை அர்ச்சனாவுக்கு எதிராக களமிறக்கினாரோ, இப்போ அவரையே தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அர்ச்சனா ஈஸியா ஒரு பெரிய குரூப்புக்கு தலைவியாக உட்கார்ந்து கொண்டு கேம் ஆடி வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

வைல்டு கார்டு என்ட்ரி

வைல்டு கார்டு என்ட்ரி

சுசித்ராவுக்கு முன்னதாக வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா, இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, அதன் பிறகு வந்த சுசித்ராவை உடனடியாக வெளியே அனுப்புகிறார்களே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜித்தன் ரமேஷ் இன்னமும் கேமை விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவரும் குரூப்புடன் சேர்ந்து கொண்டே தப்பித்து வருகிறார் என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X