இப்படி ஏதாவது நடந்தா தான் உண்டு.. அர்ச்சனா தயவால் பாலாவுக்கு அடித்த யோகம்.. இந்த வாரம் சேஃப்!

சென்னை: கேப்டன் ஆகிவிட்டோம், நாம அடுத்த வாரமும் சேஃப் அன்பு ஜெயித்துவிட்டது என அர்ச்சனாவை இரண்டு நாட்கள் மட்டுமே சந்தோஷப்பட வைத்து விட்டு, வெளியே அனுப்பிவிட்டனர்.

5 முறைக்கும் மேல் கேப்டன் பதவிக்காக போராடியும் ஜெயிக்காத பாலாவுக்கு கடைசியாக அர்ச்சனாவின் தயவால் பாலாவுக்கு அந்த பதவி கிடைத்துள்ளது.

கேப்டன்சியை அடையவே முடியாத பாலாவுக்கு டைட்டில் வின் பண்ணனும் என்கிற ஆசை எப்படி வருகிறது என நெட்டிசன்கள் நொங்கெடுத்து வருகின்றனர்.

வேஸ்ட் பாலா

வேஸ்ட் பாலா

ஆஜீத் கூட விளையாடி ஜெயித்து கேப்டன் பதவியை இந்த பிக் பாஸ் வீட்டில் பெற்றுள்ளார். ஆனால், நம்ம பயில்வான் பாலா வெறும் வாய்ச்சொல் வீரர் தான் போல, கடைசி வரை கேப்டன் பதவியே பாலாவுக்கு கிடைக்காதா எனும் நிலை, கடந்த வாரம் அர்ச்சனாவிடம் கேப்டன்சி டாஸ்க்கில் தோற்ற போது உருவானது.

சந்தோஷப்பட்ட அர்ச்சனா

சந்தோஷப்பட்ட அர்ச்சனா

பாலா, ரம்யா என டஃப் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு தனது திறமையை காட்டி ஜெயித்த ஆக்ரோஷத்தில் அந்த பையை அப்படித் தூக்கி அடித்த அர்ச்சனா, கேமராவுக்கு முன்னாடி சென்று ஸாரா இது உனக்காக என்றார். எப்படியோ அடுத்த வாரம் நாம தான் கேப்டன் இந்த வாரமும் அடுத்த வாரமும் வெளியேற மாட்டோம் என சந்தோஷப்பட்ட அர்ச்சனாவை அதிரடியாக வெளியே அனுப்பி விட்டனர்.

அர்ச்சனாவின் தயவால்

அர்ச்சனாவின் தயவால்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அர்ச்சனாவிடம், அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை கமல்ஹாசன் கொடுத்தார். யாரையாவது தேர்வு செய்யுங்க என்றதை சட்டென மாற்றி ரம்யா, பாலா இருவரில் ஒருவரை தேர்வு செய்யுங்க என்றார். இல்லை என்றால், ரியோ அல்லது சோமுக்குத் தான் அர்ச்சனா கேப்டன் பதவியை கொடுத்திருப்பார்.

இதுக்கே இப்படி

இதுக்கே இப்படி

பிக் பாஸ் வீட்டின் கேப்டன் பதவியை அடையவே பாலாஜி முருகதாஸ் முடியவில்லை. ரொம்பவே போராடி தோற்று வருகிறார். இதில், எப்படியாவது டைட்டிலை தட்டிச் செல்ல வேண்டும் என கனவு காண்பதெல்லாம் ரொம்பவே ஓவர் என பாலாவை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த வாரம் சேஃப்

இந்த வாரம் சேஃப்

அர்ச்சனாவின் தயவால் கேப்டன் பதவி கிடைத்த நிலையில், இந்த வாரம் பாலா நாமினேஷனுக்கு வரமாட்டார். திங்கட் கிழமையான இன்றே இந்த வாரத்துக்கான நாமினேஷனில் யார் யார் எல்லாம் வராங்க, யார் வெளியே போவாங்க என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்து விடுவர்.

வைஸ் கேப்டன்

வைஸ் கேப்டன்

ஜித்தன் ரமேஷ் கேப்டனாக ஆன போது வைஸ் கேப்டன் பதவியை கூட ஏற்காத பாலா, அர்ச்சனா கேப்டன் ஆக்கியதும் உடனே அதனை ஏற்றுக் கொண்டார். ஆனால், உஷாராக எல்லா வேலைகளையும் பொறுப்பாக செய்யும் சோமசேகரை தனக்கு வைஸ் கேப்டனாக போட்டுக் கொண்டார்.

Recommended Video

Yashika opens on her relationship with Bigg Boss Balaji Murugadoss
உஷார் பாலா

உஷார் பாலா

வீட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் என்கிட்ட வந்து சொல்லணும், அப்போ தான் அது எனக்குத் தெரியும், நான் போய் கேட்டு ஸ்கோர் பண்ணுவேன் என்பதில் தெளிவாக உள்ள பாலாவை இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் எப்படி வச்சு செய்யப் போறாங்க என்பதை கண்டு ரசிப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X