விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூஸிக்கில் அன்பு கேங்.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கேபி!

சென்னை: விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூஸிக்கில் அன்பு கேங் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்களுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பானது.

அனிதா சம்பத் போஸ்ட்

அனிதா சம்பத் போஸ்ட்

இந்நிலையில் பிக்பாஸில் பங்கேற்ற சில பிரபலங்களை வைத்து ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியை படப்பிடிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத், அண்மையில் தனது இன்ஸ்டா பதிவில் ஸ்டார்ட் மியூஸிக்கில் வேற பாடியிருக்கேன் என்றார்.

அன்பு கேங்குடன் அர்ச்சனா

அன்பு கேங்குடன் அர்ச்சனா

அப்போது பிக்பாஸ் பிரபலங்கள் பங்கேற்ற ஸ்டார்ட் மியூஸிக் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அர்ச்சனா தன்னுடைய அன்பு கேங்குடன் சேர்ந்து ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

எப்போ டெலிகாஸ்ட்?

எப்போ டெலிகாஸ்ட்?

இந்த போட்டோவில் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான அர்ச்சனா, கேபி மற்றும் சோம் ஆகியோர் உள்ளனர். இந்த போட்டோவுக்கு எப்போ டெலிகாஸ்ட் என கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார் அர்ச்சனா.

க்ராப் டாப்பில் கேபி

க்ராப் டாப்பில் கேபி

இதில் கேபி பிங்க் கலர் லாங் ஸ்கர்ட் மற்றும் லைட் பிங்க் கலர் க்ராப் டாப் அணிந்துள்ளார். வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கேபியா இது என்று கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத படி உள்ளார் கேப்பிரியல்லா.

காதலர் தின ஸ்பெஷலா

காதலர் தின ஸ்பெஷலா

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த காம்போ வேற லெவல்ல இருக்குமே.. என்றும் எப்போது டெலி காஸ்ட் ஆகும்? வரும் வாரத்திலா? காதலர் தின ஸ்பெஷலா என்றும் கேட்டு வருகின்றனர்.

கடவுள் இருக்கானா குமாரு?

கடவுள் இருக்கானா குமாரு?

இருந்த போதும் சில நெட்டிசன்கள் அர்ச்சனாவை இன்னும் விளாசிதான் வருகின்றனர். அர்ச்சனா ஷேர் செய்த இந்த போட்டோவை பார்த்த ஒரு நெட்டிசன், இன்னும் என்னால் அர்ச்சனா கடவுள் இருக்கானா குமாரு என்று கேட்டதை ஏற்க முடியவில்லை. அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X