சும்மா சொல்லக்கூடாது.. என்னா எனர்ஜி.. ஆர்ஜேவாக பட்டைய கிளப்பிய அர்ச்சனா.. சுச்சி மூஞ்ச பார்க்கணுமே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜேவாக ஃபுல் எனர்ஜியுடன் பட்டைய கிளப்பினார் விஜே அர்ச்சனா.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தது முதலே அர்ச்சனாவின் அதிகாரம் தூள் பறந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனா போட்டியாளரா இல்லை பிக்பாஸா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

ஆட்டத்தை குறைத்த அர்ச்சனா
இதனை கவனித்த கமலும், நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், ஆங்கரிங் வேலையை நான் பார்த்து கொள்கிறேன் என சூடுபோட்டார். இதனை தொடர்ந்து ஆட்டத்தை குறைத்துக் கொண்டார் அர்ச்சனா.

பிக்பாஸ் ஃபன் டாஸ்க்
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார் அர்ச்சனா. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஃபன் டாஸ்க் நடைபெற்றது. இதில் டாப் பர்ஃபாமன்ஸ் கொடுத்தது அர்ச்சனாதான்.

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்
மார்னிங் ஆக்டிவிட்டிலேயே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என பீச்சில் சுண்டல் விற்பது போல் ரகளை செய்தார். நடை, பாவனை, உடல் மொழி என அனைத்திலும் அசல் சுண்டல் விற்பவரை போன்றே அட்டகாசமாக நடந்து கொண்டார் அர்ச்சனா.

அர்ச்சனாவை பாராட்டிய பிக்பாஸ்
அதனை தொடர்ந்து ஃபன் டாஸ்க்கில் ஒரு பகுதியாக இடம் பெற்ற சமையல் டாஸ்க் குறித்து அற்புதமாக விளக்கம் கொடுத்தார். விளக்கம் சிறப்பாக இருந்துச்சு என் பிக்பாஸே பாராட்டும் அளவுக்கு இருந்தது அவரது விளக்கம்.

அல்டிமேட் பர்ஃபாமன்ஸ்
அதனை தொடர்ந்து ஆர்ஜேவாக அர்ச்சனா கொடுத்த பர்ஃபாமன்ஸ்தான் அல்டிமேட். ஃபன் டாஸ்க்கின் ஒரு பகுதியாக, பிக்பாஸ் வீடு எஃப்எம் ஸ்டேஷனாக மாற்றப்பட்டது. இதில் சுச்சியும் அர்ச்சனாவும் ஆர்ஜேவாகவும் சக போட்டியாளர்கள் ஆடியன்ஸாகவும் இருந்தனர்.

மூச்சு விடாமல் பேசி..
அப்போது அர்ச்சனா ஃபுல் எனர்ஜியில் ஆர்ஜேயிங் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சக ஹவுஸ்மெட்டுகளை ஆர்ஜேக்களை போன்றே மூச்சுவிடாமல் கோர்வையாகவும் படு உற்சாகமாகவும் பேசி எண்டெர்டெயின் செய்தார்.

அசந்துப்போன ஆடியன்ஸ்
பல ஆண்டுகளாக ஆர்ஜேவாக பணியாற்றி வரும் சுச்சியை தனது பர்ஃபாமன்ஸால் பல அடி தூரம் பின்னுக்கு தள்ளிவிட்டார். அர்ச்சனாவின் பர்ஃபாமன்ஸை பார்த்து அசந்துப்போனது பிக்பாஸ் வீட்டு ஆடியன்ஸ் மட்டுமல்ல ரியல் ஆடியன்ஸும்தான்.

முகத்தில் ஈயாடவில்லை
அர்ச்சனாவின் பர்ஃபாமன்ஸை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் என்னா எனர்ஜி, வேற லெவல் என கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். அர்ச்சனாவின் பர்ஃபாமன்ஸை பார்த்தும் ஆடியன்ஸின் ரியாக்ஷனை பார்த்தும் ஆஃப் ஆகி விட்டார் சுச்சி.. முகத்தில் ஈயாடவில்லை.


Click it and Unblock the Notifications











