BB8: எவிக்‌ஷனுக்குப் பின் வீட்டுக்கு வந்த அருண்.. டைட் Hug கொடுத்து வரவேற்ற அர்ச்சனா.. க்யூட் வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் நேரடி போட்டியாளர்கள், வைல்ட் கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் என 24 போட்டியாளர்கள் இந்த சீசனில் களமிறக்கிவிடப்பட்டனர். இப்படியான நிலையில், இந்த சீசன் கடைசி வாரத்தினை எட்டிவிட்டது. ரசிகர்கள் மத்தியில் இப்போதே வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற யூகத்தில் இரண்டு போட்டியாளர்களின் பெயர்கள் உள்ளது. குறிப்பாக, முத்துகுமரன் மற்றும் சௌந்தர்யா நஞ்சுண்டன் என இருவரது பெயர்கள்தான் அதிகம் அடிபடுகின்றது. இந்நிலையில் இந்த சீசனின் டாப் 8 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த அருண், இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். எலிமினேட் ஆன பின்னர் அவர், தனது காதலியும் கடந்த சீசனின் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த சீசனில் பிக் பாஸ் தொடங்கும்போது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளும் சந்தேகங்களும் இருந்து வந்தது. குறிப்பாக, கமல் ஹாசன் இல்லை, விஜய் சேதுபதிதான் ஹோஸ்ட். போட்டியாளர்களும் டாஸ்க்கைத் தவிர எதுவும் சுவாரஸ்யமாக செய்யமாட்டேன் என்கின்றார்கள் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. முதலில் சென்ற 18 போட்டியாளர்கள் ஓரளவுக்கு செட் ஆகி, ஆட்டத்தை ஆரம்பித்த தருணத்தில் பிக் பாஸ் தரப்பில் இருந்து வைல்ட் கார்ட் எண்ட்ரி என மொத்தம் 6 பேரை களமிறக்கிவிட்டது.

archana ravichandran bigg boss arun bb8

இவர்கள் 6 பேர் வீட்டிற்குள் சென்ற பின்னர், ஏற்கனவே மிகவும் அன்பாக விளையாடிக் கொண்டு இருந்த அருண், ஃபயர் மோடுக்குச் சென்றுவிட்டார். குறிப்பாக வைல்ட் கார்ட் எண்ட்ரியோ, ஏற்கனவே உள்ள பிளேயர்களோ என யாராக இருந்தாலும் அனைவரிடத்திலும் ஃபையர் மோட் அப்ரோச்தான். இது சில இடங்களில் அருணுக்கு கை கொடுக்க, பல இடங்களில் பேக் ஃபயர் ஆனது. ஆனால் அருண் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி மக்களுக்கு ஓரளவுக்கு பிடித்துப்போன கண்டஸ்ட்டண்டாக மாறினார்.

அருண்: பிக் பாஸ் வீட்டில் இருந்தபடியே தனது காதலியான அர்ச்சனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவது, அவ்வப்போது கேமரா முன் சென்று அர்ச்சனா குறித்து பேசுவது என பல க்யூட்டான விஷயங்களையும் செய்தார். பிக் பாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட டாஸ்க் தொடங்கி, சக போட்டியாளர், விளையாடும்போது அடிபட்டுவிட்டால் அவர்களை உடனே ஆசுவாசப்படுத்துவது என அருணின் இயல்பான குணங்கள் அவரை மக்கள் மனதில் நிறுத்தியது.

archana ravichandran bigg boss arun bb8

அர்ச்சனா: வீட்டிற்குள் தனது காதலியும் 7வது சீசனின் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை சக ஹவுஸ்மேட்ஸிடம் அறிமுகம் செய்து வைத்தது, பெற்றோர்களிடம் காதலுக்கு கிரீன் சிக்னல் வாங்கியது என பல விஷயங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அருணுக்கு அமைந்துவிட்டது. இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அருண் எவிக்ட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இன்னும் ஒருவாரம்தான் போட்டி உள்ளது எனும்போது, ரசிகர்கள் ஆசுவாசமாகிவிட்டனர்.

archana ravichandran bigg boss arun bb8

வீடியோ: வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தனது காதலி அர்ச்சனாவைச் சந்திக்க அருண் சென்றுள்ளார். தன்னைப் பார்க்க வந்த அருணை இருக்கமாக கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார் அர்ச்சனா. இது தொடர்பான வீடியோ ஒன்றினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அர்ச்சனா, அதற்கு, " அருண் வந்துவிட்டார். நான் இப்போது அவருடன் இருக்கின்றேன். இந்த போட்டி மூலம் தான் யார் என்று இந்த உலகிற்கு காட்டியுள்ளார் அருண். அவருக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X