அர்ச்சனா வீட்டில விசேஷமுங்க.. அப்போ இல்லைன்னு ரொம்ப ஃபீல் பண்ணாங்க.. இப்போ வேற லெவல் கொண்டாட்டம்!

சென்னை: ஜீ தமிழ் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா ஒட்டுமொத்த வீட்டையும் தனது அன்பால் கட்டுப்படுத்தினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியிலேயே ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை செய்து வரும் அர்ச்சனா வீட்டில் விசேஷம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வளைகாப்பு நிகழ்ச்சி

வளைகாப்பு நிகழ்ச்சி

தொகுப்பாளினியும் பிக் பாஸ் போட்டியாளருமான அர்ச்சனாவின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவுக்கு அட்டகாசமாக வளைகாப்பு நிகழ்ச்சியை அர்ச்சனா நடத்தி உள்ளார். அர்ச்சனாவின் தங்கை அனிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் பிரபலங்கள்

அர்ச்சனாவின் தங்கை அனிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்களான சோமசேகர், சம்யுக்தா, கேபி, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே அர்ச்சனாவின் தங்கை அம்மாவாகப் போகும் சந்தோஷத்தால் அர்ச்சனா குடும்பமே சந்தோஷத்தில் உள்ளது.

ரியோ, நிஷா மிஸ்சிங்

ரியோ, நிஷா மிஸ்சிங்

அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அன்பு கேங் மற்றும் லவ் பெட் உள்ளிட்ட வார்த்தைகள் மக்களிடையே பிரபலமாகின. அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், சோமசேகர், கேபி உள்ளிட்ட அன்பு கேங் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நிஷா, ரியோ, மட்டும் மிஸ்சிங் என ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.

ஃபீல் பண்ண தங்கை

ஃபீல் பண்ண தங்கை

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அதிகளவு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது அர்ச்சனா தான். ஒரு பெரிய கேங்கை உருவாக்கிக் கொண்டு குரூபிசம் கேமை விளையாடி எவிக்‌ஷனில் இருந்து அர்ச்சனா எஸ்கேப் ஆகி வந்தார் என குற்றச்சாட்டுகளை முன் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது, அர்ச்சனாவின் மகள் சாரா போட்டியாளர்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது ரொம்ப கீழ்த்தரமா ட்ரோல் பண்ணாதீங்க என கேட்டுக் கொண்டது பாராட்டுக்களை அள்ளியது.

ட்ரோல் செய்யாதீங்க

ட்ரோல் செய்யாதீங்க

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் அதிகளவு நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது அர்ச்சனா தான். ஒரு பெரிய கேங்கை உருவாக்கிக் கொண்டு குரூபிசம் கேமை விளையாடி எவிக்‌ஷனில் இருந்து அர்ச்சனா எஸ்கேப் ஆகி வந்தார் என குற்றச்சாட்டுகளை முன் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது, அர்ச்சனாவின் மகள் சாரா போட்டியாளர்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது ரொம்ப கீழ்த்தரமா ட்ரோல் பண்ணாதீங்க என கேட்டுக் கொண்டது பாராட்டுக்களை அள்ளியது.

டாக்டர் படத்தில்

டாக்டர் படத்தில்

சின்னத்திரையை தாண்டி சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் முக்கியமான ரோலில் அர்ச்சனா நடித்துள்ளார். வரும் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ள டாக்டர் படத்தில் அர்ச்சனாவின் வேற லெவல் ஃபன்னான நடிப்பை ரசிகர்கள் கண்டு ரசிக்க போகின்றனர். கோலமாவு கோகிலா படத்தை போலவே இந்த படத்திலும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் இயக்குநர் நெல்சன் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X