ரியோவுக்குதான் ஃபர்ஸ்ட் ரேங்க் கொடுத்திருக்கணும்.. பல்டி அடித்த அர்ச்சனா.. நறுக்குன்னு கேட்ட கமல்!

சென்னை: ரேங்க் டாஸ்க்கில் ரியோவுக்குதான் முதலிடம் கிடைத்திருக்க வேண்டும் என்று மல்லுக்கட்டிய அர்ச்சனாவை நறுக்கென கேட்டார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கால் டாஸ்க்கின் அடிப்படையில் யார் பெஸ்ட் என்பதற்காக ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் முதல் ரேங்க் ஆரிக்கு கொடுக்கப்பட்டது. இதற்கான டிஸ்கஷன் நடந்த போது, ஆரிக்கு முதல் ரேங்க் கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சோம்.

அர்ச்சனா வாதம்

அர்ச்சனா வாதம்

இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் 6 பேர் ஓட்டு போட்டதை தொடர்ந்து முதலிடத்தில் நின்றார் ஆரி. இந்நிலையில் இதுகுறித்து நேற்றைய எபிசோடில் கேட்டறிந்தார் கமல். அப்போது, பேசிய அர்ச்சனா, முதல் ரேங்க் ரியோவுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

யார் கட் பண்ணியது?

யார் கட் பண்ணியது?

மேலும் காலராகவும் எக்ஸிக்யூட்டிவாகவும் தனது டாஸ்க்கை சிறப்பாக செய்தார் என்றும் முறையிட்டார். அப்போது குறுக்கிட்ட கமல் ரியோ பேசும் யார் முதலில் காலை கட் பண்ணியது என்று கேட்டார். அதற்கு நான் வைக்க போனேன் அதற்குள் ஆஜித் வைத்துவிட்டார் என்று பதில் கூறினார் ரியோ.

கமல் கேட்ட நறுக் கேள்வி

கமல் கேட்ட நறுக் கேள்வி

தொடர்ந்து பேசிய கமல், ஆஜித்திடம், முன்கூட்டியே ரியோ கால் பண்ண போவதை சொல்லிவிட்டார் என்று ஹவுஸ்மேட்ஸ் பேசினார்களே எப்படி சிறப்பாய் செய்தார் என்று எடுத்துக்கொள்ள முடியும் என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா, கேள்வியையெல்லாம் அவர் ஆஜித்திடம் சொல்லவில்லை.

பாலா கருத்து

பாலா கருத்து

டவுட்டா ஆஃப் த பெனிஃபிட் அடிப்படையில் அவருக்கு முதல் ரேங்கை கொடுத்திருக்கலாம் என்றார். அவரை தொடர்ந்து பேசிய பாலாஜி, சனம் இரண்டாவது இடத்தில் நின்றால் அனிதா மூன்றாவது இடத்திற்கு தகுதியானவர் என்றார்.

கலாய்த்த கமல்

கலாய்த்த கமல்

முதலில் ஆரிக்கு முதலிடம் கொடுத்த சோம சேகரும் நேற்றைய எபிசோடில் தனது நிலைப்பாட்டில் மாறினார். தொடர்ந்து ரம்யாவிடம் கருத்தை கேட்ட கமல், நீங்க மாறி மாறி பேசுறீங்க, ஷிவானி பாலாஜிக்காக மட்டும் தான் பேசுறாங்க இல்லாட்டி பேச மாட்றாங்க என கலாய்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X