Thalapathy 68 update - தளபதி 68 அப்டேட் என்ன தெரியுமா?.. தயாரிப்பாளர் போட்ட தரமான ட்வீட்
சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் படமானது வணிக ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதாகவும் 560 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ சக்சஸ் மீட்டும் நடந்தது.

தளபதி 68: இதற்கிடையே ஏற்கனவே அறிவித்தபடி லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி 68 படத்தின் பூஜை நடந்தது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரசாந்த் ஸ்டூடியோவில் நடந்த பூஜை தொடர்பான வீடியோவும் பூஜையில் கலந்துகொண்டவர்கள் தொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகின.
மல்டி ஸ்டாரர்: தளபதி 68ல் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 90களில் பிரபலமாக இருந்த பிரசாந்த் பல வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுப்பதால் அவரது ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பயங்கரமாக எழுந்திருக்கிறது.
பாடல் ஷூட்டிங்: பூஜையை முடித்த கையோடு ராஜுசுந்தரம் கோரியோகிராஃபியில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடனம் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்தப் பாடல் நட்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாகவும் மதன் கார்க்கி பாடலை எழுதியிருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பிரசாந்த் விஜய்க்கு நெருங்கிய நண்பராகவும்; மைக் மோகன் வில்லனாகவும் நடிக்கிறாராம்.
வெளிநாட்டில் படக்குழு: சென்னையில் பாடல் ஷூட்டிங்கை முடித்த படக்குழு அடுத்ததாக பாங்காக் சென்றிருக்கிறது. தளபதி விஜய்யும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக லியோ சக்சஸ் மீட்டை முடித்துவிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது
அப்டேட்: இந்த சூழலில் தளபதி 68 பற்றிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. அதாவது வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அர்ச்சனா, “எங்கள் ஜீனியஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இன்னும் ஜாலியான படப்பிடிப்பு இருக்கிறது. தாய்லாந்தில் நேற்று இரவு முழுவதும் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சி எடுக்கப்பட்டதாலும் இன்று பிறந்தநாள் என்பதாலும் வெங்கட் பிரபு இன்று விடுமுறை எடுத்துக்கொண்டார்” என பதிவிட்டிருக்கிறார். அவரது ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











