twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜித்தன் ரமேஷ் கேப்டன்சி சூப்பர் சார்.. கடைசி வரை விட்டுக்கொடுக்காத அர்ச்சனா.. போட்டுகொகடுத்த பாலா!

    |

    சென்னை: மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஜித்தன் ரமேஷின் கேப்டன்ஷிப்பை கழுவி ஊற்றிய நிலையில் அர்ச்சனா மட்டும் செம்ம.. சூப்பர் என பாராட்டு பத்திரம் வாசித்தார்.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமராக ஜெயிலுக்கு போனார் ஜித்தன் ரமேஷ். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அதுகுறித்து கேட்டார் கமல்.

    Recommended Video

    சென்னை: போனா போகுதுன்னு போன ‘எக்சிட்’ ரமேஷ்.. கண்டு கொள்ளாத ரூம்மேட்ஸ்…!

    கேப்டனாக இருந்தும் சிறைக்குள் சென்றதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன ஜிததன் ரமேஷ், எல்லா வேலையையும் நான் சரியாகதான் செய்ததேன் என்றார்.

    அனிதா தூங்கிக்கொண்டிருந்தார்

    அனிதா தூங்கிக்கொண்டிருந்தார்

    டாஸ்க்கையும் செய்து கொண்டு வீட்டு வேலையையும் சரியாகதான் செய்தேன். கண்ணுவலி இருந்ததால் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ண சொன்னார்கள் ஆகையால் சில வேலைகளை நிஷாவை செய்ய சொன்னேன் என்றார். மேலும் சில பேர் எத்தனை முறை சொன்னாலும் தூங்கி கொண்டே இருந்தார்கள் சார், அப்போது கோவத்தை காட்டாமல் எழுப்பி விட்டிருக்கிறோம் என்றார்.

    அனிதாதான் தூங்கினார்

    அனிதாதான் தூங்கினார்

    இதனைக் கேட்ட கமல் யார் அப்படி தூங்கிக் கொண்டிருந்தது என்று கேட்க அனிதாதான் சார் என்று பட்டேன போட்டுடைத்தார் ரமேஷ். எழுப்பிவிட்டு வந்த பிறகும் அடுத்த 2 நிமிடத்திற்குள் அப்படியே தூங்கி விடுவார் எனார் ஆனால் ரமேஷின் குற்றச்சாட்டை மறுத்தார் அனிதா.

    எதுக்கு கேப்டன்?

    எதுக்கு கேப்டன்?

    மேலும் ரமேஷ் கேப்டன் ஷிப் குறித்து பேசிய அனிதா,
    கண்ணு வலி என்றாலும் கூட தூரமாக இருந்து சில வேலைகளை செய்திருக்கலாம். ஆனால் நிஷாதான் எல்லா வேலைகளையும் செய்தார். அப்புறம் எதுக்கு கேப்டன் என்றும் கேள்வி எழுப்பினார் அனிதா.

    எல்லாத்தையும் சரியாக செய்தார்

    எல்லாத்தையும் சரியாக செய்தார்

    தொடர்ந்து பேசிய அர்ச்சனா ரமேஷ் கேப்டன்ஷிப் சரியில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லை. ரமேஷ் எல்லா வேலையையும் சரியாகதான் செய்தார். எல்லா டவலும் மாற்றப்பட்டது. கிட்சனிலும் எல்லா வேலைகளையும் சரியாக செய்தார். ரோபோவாகவும் சரி மனிதராகவும் சரி சரியாக தான் செய்தார் என்றார.

    இன்னும் வாய்ஸ் கொடுத்திருக்கலாம்

    இன்னும் வாய்ஸ் கொடுத்திருக்கலாம்

    பின்னர் பேசிய ஆரி கொடுக்கப்பட்ட வேலைகளை இன்னும் கொஞ்ச ஈடுபாட்டோடு பண்ணியிருக்கலாம். நமக்கு கொடுத்த வேலைகளை சரியாக பண்ண வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு பதவி வழங்கப்படுகிறது. ஆனால் ரமேஷ் இன்னும் சிறப்பாக வாய்ஸ் கொடுத்திருக்கலாம். வைஸ் கேப்டன் வாய்ஸ்தான் கேட்டது என்றார்.

    வேண்டாம் என்றேன்..

    வேண்டாம் என்றேன்..

    தொடர்ந்து பேசிய பாலாஜி, முதலில் நான்தான் அவருடைய பெயரை எடுத்தேன். டாஸ்க்லேயே யும் அவர் முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை. முதலில் வைஸ் கேப்டனாக என்னைதான் இருக்க சொன்னார். ஆனால் வைஸ் கேப்டனுக்கான வேலைகள், தூங்கவிடாமல் பார்த்துக் கொள்வது, அதிகமாக இருந்ததால் நான் வேண்டாம் என்றேன் என்று கூறினார்.

    English summary
    Archana says Ramesh captain ship was good. But apart from her all the housemates were against his captain ship.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X