அன்புக்கு பழக்கமில்லாதவன் நான் என்றார்.. அந்த இடத்தில்தான் உடைந்து போனேன்.. பாலா குறித்து அர்ச்சனா!
சென்னை: பாலாஜி மீது தனக்கு திடீர் பாசம் ஏற்பட காரணம் என்ன என்பதை கமலிடம் கூறினார் அர்ச்சனா.
நேற்றைய கமலின் எபிசோடு சுவாரசியமாக இருந்தது. ரியோ குரூப் குறித்து புட்டு புட்டு வைத்தார் கமல்.
இதேபோல் ஆரிக்கு ஆதரவாகவும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் குறித்தும் பேசினார்.

மொத்தமாய் வச்சு செய்தார்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அர்ச்சனா பாலாவை தனது சகாக்களுடன் சேர்ந்து டார்கெட் செய்தார். தூங்கிக் கொண்டிருந்த பாலாவை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொன்னதோடு மொத்தமாய் சேர்ந்து வச்சு செய்தார்.

பாசப் போராட்டம்
ரொம்பவே பயங்கரமாக இருந்தது அந்த காட்சிகள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த பிரச்சனை ஓய்ந்தது. என் குழந்தை என அர்ச்சனா கண்ணீருடன் பாலாவிடம் பேச, அம்மா என பாலா பேச பெரும் பாசப் போராட்டமாக மாறிவிட்டது பிக்பாஸ் வீடு.

அன்புக்கு பழக்கமில்லாதவன்
இந்நிலையில் அதுகுறித்து அர்ச்சனாவிடம் பேசினார் கமல். அதற்கு பாலாவின் கதையை கேட்டபோதே பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றார் அர்ச்சனா. மேலும் நான் பாலாவிடம் சொன்ன போது கூட, நான் அன்புக்கு பழக்கமில்லாதவன் என்றார்.

பிரேக் டவுன் ஆனேன்
அன்பை உணராமலே வளர்ந்தவன் நான். ஆகையால் எனக்கு இந்த அன்பெல்லர்ம் ஸ்ட்ரேட்டர்ஜியாக தெரிகிறது. என்னால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். அந்த ஒரு பாயிண்டில்தான். நான் பிரேக் டவுன் ஆனேன் என்றார் அர்ச்சனா.

பாலாஜிக்கு டிப்ஸ்
இதனைக் கேட்ட கமல், பாலாஜி அன்பே ஸ்ட்ரேட்டர்ஜி என்றால் அதைவிட வேறு என்ன வேண்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள் என அவருக்கு டிப்ஸ் கொடுத்தார் கமல்.


Click it and Unblock the Notifications











