நரி ஊருக்குள்ள வர்ரதே தப்பு.. இதுல இதுவேறயா..அர்ச்சனா ஷேர் செய்த போட்டோவால் காண்டாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: அர்ச்சனா ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்துள்ளனர்.
பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் தான் போட்டியாளர் என்பதை மறந்து ஓவர் அதிகாரம் செலுத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸா என்று கேட்டு மரண கலாய் கலாய்த்தனர்.

குட்டு வைத்த கமல்
அர்ச்சனாவின் போக்கை பார்த்த கமல் தன்னுடைய விருமாண்டி படத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை கூறி, நீங்களும் போட்டியாளர் தான் ஆங்கர் இல்லை என்று குட்டு வைத்தார். அதன் பிறகு அன்பு என்று அஸ்திரத்தை கையில் எடுத்த அர்ச்சனா, தனக்கென ஒரு கேங் உருவாக்கி விளையாடினார்.

கடவுள் இருக்கானா குமாரு?
மொத்த அன்பு கேங்கும் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்து கார்னர் செய்தது. இதனால் கடுப்பான ரசிகர்கள் அர்ச்சனாவையும் அன்பு கேங்கையும் கழுவி ஊற்றினர். ஒவ்வொரு வாரமும் ஆரி சேவ்வானதை பார்த்து கடவுள் இருக்கானா குமாரு என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஃபினாலே வாராத்தில்
இதன் தொடர்ச்சியாக ஆரியை மானஸ்தனாய் இருக்கவேண்டும், முறை மாமன் என இழிவாகவும் பேசினார். இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து அவரை வெளியேற்றினர் ரசிகர்கள். அதன்பிறகு ஃபினாலே வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போதும் கூட ஆரியிடம் முகம் கொடுத்து பேசவில்லை அர்ச்சனா.

ரம்யா பாண்டியனுடன்..
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் சக போட்டியாளர்களுடன் எடுத்த போட்டோக்களையும் சக போட்டியாளர்களை சந்தித்த போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் ரம்யா பாண்டியனுடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சிறிய புன்னகையுடன்..
அந்த போட்டோவுக்கு சில பிணைப்புகள் ஒரு சிறிய புன்னகையுடன் தொடங்குகின்றன.. பின்னர் நாங்கள் குடும்பமாகி மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம்!! இந்த சிங்கப்பெண்ணை தெரிந்ததில் பெருமை கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அன்பும் அணைப்பும்..
இதனை பார்த்த ரம்யா பாண்டியன் உங்களுக்கு நிறைய அன்பையும் அணைப்பையும் அனுப்புகிறேன் என பதிவிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆரி வேற மாரின்னு பாட்டா பாடுகிறாய் என விளாசியுள்ளனர்.

நரி ஊருக்குள்ள வர்ரதே..
மேலும் சிலர் நரி ஊருக்குள்ள வர்ரதே தப்பு இதுல ஊளையிட்டுக்கிட்டே வருதா என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்களின் நட்பை நம்ப முடியவில்லையே என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் பலர் இவர்களின் நட்பை பாராட்டியுள்ளனர்.

இதயத்திற்கு நெருக்கமானவர்கள்
இதனிடையே அர்ச்சனா மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் தனது மகள் ஸாராவும் கேபியும் கட்டியணைத்தப்படி உள்ளனர். இந்த இரு பெண்களும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என குறிப்பிட்டுள்ள அர்ச்சனா, ஒருவரை மற்றொருவரில் பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











