என் மகள் இவரின் தீவிர ரசிகை.. பிக்பாஸ் பிரபலத்தை கட்டியணைத்து போட்டோ போட்ட அர்ச்சனா!

சென்னை: பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கமாக எடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ள அர்ச்சனா, தனது மகள் இவரின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் 16 பிரபலங்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

பின்னர் பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா மற்றும் பாடகியும் ஆர்ஜேவுமான சுச்சி ஆகியோர் வைல்டு கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அன்பு கேங்

அன்பு கேங்

இதில் அர்ச்சனா அன்புதான் ஜெயிக்கும் என தனக்கென ஒரு கேங்கை ஃபார்ம் பண்ணிக்கொண்டு விளையாடினார். இதில் ரியோ, சோம், நிஷா, கேபி உள்ளிட்டோர் அவருக்கு நெருக்கமாயினர்.

அடிக்கடி சந்திப்பு

அடிக்கடி சந்திப்பு

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகும் அவர்களின் நட்பு தொடர்ந்து வருகிறது. வெளியே அனைவரும் ஒன்றாக சந்தித்து ரீயூனியன் செலிபிரேட் செய்கின்றனர். மேலும் ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்கு சென்றும் தங்களின் நட்பை பலப்படுத்தி வருகின்றனர்.

வீட்டிற்கு சென்று

வீட்டிற்கு சென்று

அந்த வகையில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஸாரா மற்றும் கேபி ஆகியோர் சோம சேகரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஏற்கனவே அவர்கள் அனைவரும் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

சிறப்பான பாண்ட்

சிறப்பான பாண்ட்

இந்நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோம சேகரை கட்டியணைத்தப்படி நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு, இங்கு மேலும் ஒரு மிகவும் சிறப்பான ஒரு பாண்ட்.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

சிம்பிள் ஹலோவுடன் இது தொடங்கியது. என்னுடைய மகள் ஸாரா இவரின் பெரிய ஃபேன்.. இந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி நீ.. என் வாழ்க்கையில் சிறந்த நண்பன் நீ.. சோம சேகர் ஐ லவ் யூ.. என பதிவிட்டுள்ளார்.

அன்பு ஜெயிச்சுடுச்சா?

அன்பு ஜெயிச்சுடுச்சா?

அர்ச்சனாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அன்பு ஜெயிச்சுடுச்சா என்று கேட்டு கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் உங்கள் முகத்தை மட்டும் காட்டாதீங்க அர்ச்சனா என்றும் பங்கம் பண்ணியுள்ளனர். அர்ச்சனாவும் சோமும் சேர்ந்திருக்கும் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X