எல்லோரும் செத்த சாத்துறீங்களா.. சத்தம் போட்ட அர்ச்சனா.. ஸ்கூல் பசங்க மாதிரி கப்சிப்பான ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: அர்ச்சனா அக்கா சைலன்ட் என கத்தியதும் எவ அவ என கேட்காமல் அனைத்து ஹவுஸ்மேட்களும் கப்சிப் ஆகி விட்டனர்.
பாலாஜி வேண்டுமென்றே தன் இஷ்டத்துக்கு பாட்டி சொல்லை தட்டாதே கேமை விளையாடி சொதப்பி விட்டார்.
அதன் காரணமாக லக்சரி டாஸ்க்கின் மொத்த மதிப்பெண்களையும் பிக் பாஸ் பூஜ்ஜியம் ஆக்கி விட்டார்.

ஜீரோ பாலாஜி
ஹீரோ பாலாஜி ஆக மாறுவார் என பார்த்தால், எல்லா டாஸ்க்கிலும் சொதப்பி, சண்டை போட்டு ஜீரோ பாலாஜியாக மாறி விட்டாரே.. கமல் ஒரு பக்கம் நமட்டு சிரிப்புக்கு வேட்டு வைக்க, பிக் பாஸ் மறுபக்கம் மொத்த கொட்டத்தையும் அடக்கி ஒடுக்கி விட்டார்.

கெஞ்சிய அர்ச்சனா
பிக் பாஸ் பாலா பண்ண தப்புக்காக மொத்த லக்சரி பட்ஜெட்டிலும் கை வைத்து விடாதீர்கள் பிக் பாஸ், கொஞ்சம் கருணை காட்டுங்கள் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் சேர்த்து பிக் பாஸிடம் கெஞ்சி கொண்டிருக்கும் போது, அதை கொஞ்சம் கூட மதிக்காமல் ஹவுஸ்மேட்கள் கத்தி கூச்சலிட்டுக் கொண்டு இருந்தனர்.

சத்தம் போட்ட அர்ச்சனா
ஏற்கனவே பாலா மீது கோபத்தில் இருக்கும் அர்ச்சனா, தேவையில்லாமல், ஹவுஸ்மேட்கள் இரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்ததை தாங்க முடியாமல், "ஹே காய்ஸ் காட் சேக்யா" என சத்தம் போட சகலத்தையும் சாத்திக் கொண்டு ஹவுஸ்மேட்கள் ஒரு எச்.எம். முன்னாடி உட்கார்ந்து இருப்பது போல பின் டிராப் சைலன்ட்டுடன் அடங்கி விட்டனர்.

மன்னிப்பு கேட்ட அர்ச்சனா
தொடர்ந்து பிக் பாஸிடம் லக்சரி பாயிண்ட்ஸ் வேண்டும் என கெஞ்ச தொடங்கிய அர்ச்சனா, 15 போட்டியாளர்களுக்கும் தேவையான உணவுக்காக மிகவும் மன்றாடியும், ஹவுஸ்மேட்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டும் பேசினார். ஆனாலும், பிக் பாஸ் லக்சரி பட்ஜெட் பற்றி எதுவுமே பேச வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











