ஆரிக்கு செக் வைக்கும் அர்ச்சனா.. நிஷா மேட்டரை இழுத்து ரியோவை சூடேற்றுகிறார்.. என்ன நடக்கப் போகுதோ?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நிஷாவும் ரியோவும் பாசமலர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
அர்ச்சனாவால் நேரடியாக ஆரியிடம் மோத முடியாத நிலையில், நிஷாவின் பிரச்சனையை கிளப்பி ரியோவை சூடேற்றும் இரண்டாவது புரமோ சூடு பறக்கிறது.
ஜித்தன் ரமேஷும் புரியாமல் கூட சேர்ந்து கொண்டு பேசுவது காலக் கொடுமை.

கரம் வச்சிடாங்க
ஆரிக்கு முதல் இடம் கிடைத்தது, மற்றும் சோமசேகர், ரியோ ஆரியுடன் சிரித்து மகிழ்ந்து பேசுவது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் முதல் புரமோவில் ஆரிக்கு நேராகவே அவர் செய்தது சரியில்லை என பேசிய நிலையில், இரண்டாவது புரமோவில் ஆரிக்கு எதிராக ரியோவை தயார் படுத்துகிறார் அர்ச்சனா என்பது தெரிகிறது.

அன்பு வேஷம்
அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என அடித்து சொல்லும் அர்ச்சனா, அன்பு வேஷம் போட்டு விளையாடி வருகிறார் என்பதை பாலாஜி முருகதாஸ் நன்றாக உணர்ந்து கொண்டு அவரிடம் இருந்து விலகி இருந்து வந்தார். ஆனால், இப்போ, முதல் இடத்துக்கு ஆரி முன்னேறி செல்வது பிடிக்காமல் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் ஆரிக்கு எதிராக திரட்ட சத்தமே இல்லாமல் அர்ச்சனா வேலை செய்வது போல தெரிகிறது.

பிராண்டிங் பண்றாரு
நிஷாவின் காமெடி நல்லா இல்லை என ரியோ, சோம், அர்ச்சனா எல்லாம் சொல்லி கலாய்த்தா அது, ஜாலி அதுவே ஆரி பண்ணா அவர் நிஷாவை பிராண்டிங் பண்றாரு, இதனால், வெளியே நிஷா போனால், அவருக்கு ஸ்டாண்ட் அப் காமெடி வாய்ப்பு கிடைக்காது என்கிற ரேஞ்சுக்கு அர்ச்சனா ரியோவை நல்லாவே கொம்புச் சீவி விடுகிறார்.

எங்க அடிச்சா வலிக்கும்
எங்க அடிச்சா யாருக்கு வலிக்கும் என நன்றாக தெரிந்து கொண்ட அர்ச்சனா, ஆரியும், நிஷாவும் இல்லாத நேரத்தில் ரியோவையும் ஜித்தன் ரமேஷையும் வைத்துக் கொண்டு இந்த பிரச்சனை பற்றி பேசுகிறார். ஆரியும், நிஷாவையும் வைத்து ஒரு இரண்டு நிமிடம் பேசினாலே உடனே இதுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்து விடும். ஆனால், அர்ச்சனாவின் மைண்ட் கேமே வேறு என்பதால் இப்படி செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

ஜித்தனும் சும்மா இல்லை
நிஷாவை மரண பங்கமாக கலாய்க்கும் ஜித்தன் ரமேஷுக்கும் பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்கிற ஆசை கேப்டன் பதவி கிடைத்த பிறகு வந்து விட்டது. அர்ச்சனா கேங்கில் இணைந்து இருப்பதால் தான் இத்தனை வாரம் பிக் பாஸ் வீட்டில் தப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விட்டு, ரியோவிடம் நல்லா ஆரியை பற்றி போட்டுக் கொடுக்கிறார்.

ரியோ தப்பிப்பாரா
அர்ச்சனாவின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஏகப்பட்ட தடவை தப்பித்து வந்த ரியோ ராஜ், நிஷா அக்கா விவகாரம் என்பதால், பாச வலையில் மாட்டிக் கொண்டு ஆரியுடன் சண்டை போடுவாரா? அல்ல இந்த முறையும் அர்ச்சனாவின் சூழ்ச்சியில் சிக்காமல் அது நிஷாவோட பிரச்சனை நிஷா தனியா ஃபேஸ் பண்ணுவாங்கன்னு அர்ச்சனாவுக்கு கரியை பூசுவாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











