நேத்து நீ பண்ணது நியாயமா.. என்னலாம் பேசின.. நிஷாவை பழிக்கு பழி வாங்கும் அர்ச்சனா.. ஷாக் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அர்ச்சனா டீம் மனிதர்களாகவும் பாலாஜி டீம் ரோபோக்களாகவும் உள்ளது தெரியவந்தது.

முதல் புரமோவில் பாலாஜியை வச்சு செய்தனர் ஹவுஸ்மேட்ஸ். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியோகியுள்ளது.

நேத்து நீ பண்ணினது நியாயமா?

நேத்து நீ பண்ணினது நியாயமா?

இதில் அர்ச்சனா மற்றும் அவரது டீம் மொத்தமாக சேர்ந்து நிஷாவை வச்சு செய்கின்றனர். அப்போது பேசும் அர்ச்சனா, நிஷா நீ நேத்து பண்ணினது நியாயமா, பதில் சொல்லுங்க என்று மிரட்டுகிறார். அதற்கு நிஷா விளக்கம் கொடுத்தும் ஏற்காத அர்ச்சனா அதனை ஏற்காமல் அது முழுக்க முழுக்க நடிப்புன்னு நினைக்கிறேன் என்றகிறார்.

எனக்கும் தெரியும்

எனக்கும் தெரியும்

தொடர்ந்து பேசும் அர்ச்சனா கேம்னு வந்தா நான் ரொம்ப சீரியஸா விளையாடுவேன், விளையாடாத என்று நிஷாவை அதட்டும் அர்ச்சனா அவரை தொங்க சொல்கிறார். மேலும் உங்களுக்கு என்னுடைய சோகமும் கோவமும் எந்தளவுக்கு தெரியுமோ அந்தளவுக்கு உங்க சோகமும் கோபமும் எனக்கும் தெரியும் என்றார்.

பழிக்கு பழி

பழிக்கு பழி

மேலும் நேத்து என்னல்லாம் பேசுச்சு தெரியுமா என நிஷாவை பற்றி ரம்யாவிடமும் போட்டுக்கொடுத்தார். தொடர்ந்து குரூப்பாக சேர்ந்து நிஷாவை வச்சு செய்கிறார் அர்ச்சனா. இந்த புரமோவின் மூலம் அர்ச்சனா நிஷாவை பழிக்கு பழி வாங்குவது தெரியவந்துள்ளது.

தரமான சம்பவங்கள்

தரமான சம்பவங்கள்

மோசமான பாடி லாங்குவேஜை காட்டியும் வெறுப்பேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்று இரவு தரமான சம்பவங்கள் இருக்கு என தெரிவித்து வருகின்றன்றனர். நேற்றை போலவே இன்றும் டாஸ்க் முடிந்ததும் சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X